பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கட்டடங்களில் ஆய்வு செய்து மழைக்கு முன் சீரமைக்க உத்தரவு

Added : செப் 16, 2019
Share
Advertisement

சென்னை: 'மாநிலம் முழுவதும் உள்ள, அரசு கட்டடங்களில், பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும்' என, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

பராமரிப்பு:
தலைமை செயலகம், மருத்துவமனைகள், பள்ளி கட்டடங்கள், அமைச்சர்கள், நீதிபதிகளின் பங்களாக்கள், ஊழியர்கள் குடியிருப்புகள் உள்ளிட்ட, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு கட்டடங்களை, பொதுப்பணித் துறையினர் பராமரித்து வருகின்றனர். வடகிழக்கு பருவமழை, அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில், இந்த கட்டடங்களில், பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும், கட்டடங்கள் பிரிவின் முதன்மை தலைமை பொறியாளர், ராஜ்மோகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பொதுப்பணித் துறையால் பராமரிக்கப்படும் அரசு கட்டடங்களை, சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். கட்டடங்களில் உள்ள கழிவுநீர் மற்றும் குடிநீர் குழாய்களில் குறைபாடுகள் இருந்தால், அவற்றை மாற்றி அமைக்க வேண்டும்.

மாற்று ஏற்பாடு:
கட்டடங்களில் உள்ள மின்சாதனங்களில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும். கட்டடங்களில் மேற்கூரைகளில் நீர் தேக்கம், நீர் கசிவுஉள்ளிட்டவை இருந்தால், அவற்றை தடுக்க, முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுகளில், மின் தடையை சமாளிக்க மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அங்கு, கழிவுநீர், மழைநீர் தேக்கத்தால் தொற்றுநோய் ஏற்படுவதை தடுக்க வேண்டும். புயல் பாதுகாப்பு மையங்களில் அடிப்படை வசதிகளை, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர்கள், மின்பொறியாளர்கள், இது தொடர்பான ஆய்வு அறிக்கையை, புகைப்படத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X