பொது செய்தி

தமிழ்நாடு

மழை முன்னெச்சரிக்கை பணி

Added : செப் 16, 2019
Share
Advertisement

வடகிழக்கு பருவ மழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் ஆகிய மாவட்டங்கள், அதிகம் பாதிக்கப்படுகின்றன. இம்மாவட்டங்களில், பருவ மழை துவங்கும் முன், நீர்வழித் தடங்களில் துார் வாருதல், கரைகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட, முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக, ஆண்டுதோறும், பொதுப்பணித் துறைக்கு, அரசு நிதி வழங்குகிறது.

விரைவில், வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில், இப்பணிகளை மேற்கொள்ள, பொதுப்பணித்துறை, அரசிடம், 10 கோடி ரூபாய் கோரியது. ஆனால், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட, 7.65 கோடி ரூபாயை மட்டுமே வழங்க முடியும் என, நிதித்துறை தெரிவித்தது. தற்போது, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி, கீழ்பாலாறு, கொசஸ்தலையாறு, ஆரணியாறு, கொள்ளிடம் மற்றும் வெள்ளாறு வடிநில பகுதிகளில்., டிச., இறுதி வரை, மழை முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்ததாரர் தேர்வை, பொதுப்பணித் துறையினர், விரைவில் துவங்க உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X