பொது செய்தி

தமிழ்நாடு

ஆவின் பொருட்கள் விலை உயர்வு; வரும், 18 முதல் அமல்

Added : செப் 16, 2019
Share
Advertisement
ஆவின் பொருட்கள் விலை உயர்வு; வரும், 18 முதல் அமல்

சென்னை: ஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து நெய், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் நெய் விலை, 495 ரூபாயாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு பால் கொள்முதல் விலையை, லிட்டருக்கு, 4 ரூபாயும், விற்பனை விலையை, 6 ரூபாயும், ஆவின் நிறுவனம் உயர்த்தியது. இந்த விலை உயர்வு, ஆக., 18ல் நடைமுறைக்கு வந்தது.இதைத் தொடர்ந்து, பால் பொருட்களின் விலையை உயர்த்த, ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளது; புதிய விலை விபரங்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, ஆவின் நெய் விலை லிட்டருக்கு, 30 ரூபாயும், வெண்ணெய், பால்கோவா விலை கிலோவுக்கு, 20 ரூபாயும் உயர்த்தப்படுகிறது. ஆவின் பால் பவுடர், பனீர் ஆகியவற்றின் விலை கிலோவுக்கு, 50 ரூபாய் உயர்கிறது.ஆவின் டிலைட் பால் விலை லிட்டருக்கு, 8 ரூபாயும், நறுமண பால் விலை லிட்டருக்கு, 6 ரூபாயும், தயிர் விலை லிட்டருக்கு, 4 ரூபாயும் உயர்கிறது. இந்த விலை உயர்வு, வரும், 18ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X