பொது செய்தி

இந்தியா

நிரம்புகிறது சர்தார் சரோவர் அணை; நேரில் பார்வையிடுகிறார் பிரதமர்

Added : செப் 16, 2019
Advertisement

ஆமதாபாத் : குஜராத்தில் உள்ள சர்தார் சரோவர் அணை, நாளை முழு கொள்ளளவை எட்டவுள்ளது. இதை, பிரதமர் மோடி, நேரடியாக பார்வையிடவுள்ளதாக, குஜராத் முதல்வர், விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும், விவசாயத்துக்காகவும், நர்மதா ஆற்றில், சர்தார் சரோவர் அணையை கட்ட, 1961ல் அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் கட்டுமான பணிகள், 56 ஆண்டுகளாக நடந்து, 2017ல் தான் முழுமையாக முடிவடைந்தன. இந்த அணையின் முழு கொள்ளளவு, 138.68 மீட்டர். கடந்தாண்டு மழை குறைவாக பெய்ததால், இந்த அணை, பாதியளவு தான் நிரம்பியது.

இந்தாண்டு, கடந்த சில நாட்களாக, குஜராத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, வேகமாக நிரம்பத் துவங்கியுள்ளது. தற்போது, அணையின் நீர்மட்டம், 138 மீட்டராக உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில், அணை, முழு கொள்ளளவை எட்டவுள்ளது.

இது குறித்து, குஜராத் முதல்வர், விஜய் ரூபானி கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள், நாளை, நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில், சர்தார் சரோவர் அணையும், 138.68 மீட்டர் என்ற முழு கொள்ளளவை எட்டுகிறது. சர்தார் சரோவர் அணை, முழு கொள்ளளவை எட்டுவது, வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. குஜராத் மக்களுக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு. எனவே, அணை முழு கொள்ளளவை எட்டும் நிகழ்வை பார்ப்பதற்காக, பிரதமர் மோடி, நாளை குஜராத் வரவுள்ளார். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X