கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்: இன்று காலை நடக்கிறது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்: இன்று காலை நடக்கிறது

Added : செப் 16, 2019
Share
மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே, கொழுமத்திலுள்ள மிகவும் பழமை வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, யாகசாலையில் பூஜைகள் துவங்கின.திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா கொழுமத்தில் பல நுாறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள அம்மன் லிங்கம் வடிவில் அமைந்துள்ளது கோவிலின் சிறப்பம்சம் ஆகும். இக்கோவிலில் இன்று
 கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்: இன்று காலை நடக்கிறது

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே, கொழுமத்திலுள்ள மிகவும் பழமை வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, யாகசாலையில் பூஜைகள் துவங்கின.திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா கொழுமத்தில் பல நுாறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது.
இங்குள்ள அம்மன் லிங்கம் வடிவில் அமைந்துள்ளது கோவிலின் சிறப்பம்சம் ஆகும். இக்கோவிலில் இன்று கும்பாபிேஷகம் நடக்கிறது.கும்பாபிேஷக நிகழ்ச்சி மங்கள இசையுடன் நேற்று முன்தினம் தொடங்கியது. நடராஜர் கோவிலில் இருந்து பூஜை பொருட்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து யாகசாலை பிரவேசம், முதல் கால யாகபூஜை, தீபாராதனை நடந்தது.
நேற்று காலை, இரண்டாம் கால யாக பூஜை, வேதபாராயணம், அஷ்டபந்தன மருந்து சாத்துதலும், மாலையில், மூன்றாம் கால யாகபூஜை, மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, மூலமந்திர ேஹாமமும் நடந்தன.விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக இன்று, அதிகாலை நான்காம் கால யாக பூஜையும், காலை, 5:00 முதல் 5:30 மணிக்குள் கோட்டை மாரியம்மன் கோவிலின் ராஜகோபுரத்துக்கும், 5:30 முதல் 6:00 மணிக்குள் விநாயகர், கோட்டை மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து தசதரிசனம், மகா அபிேஷகம், அன்னதானமும் நடைபெறுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X