பொது செய்தி

இந்தியா

போக்குவரத்து விதிமீறல் அபராதம்; ஜார்க்கண்டில் மூன்று மாதம் நிம்மதி

Added : செப் 16, 2019
Advertisement

ராஞ்சி : ஜார்க்கண்டில், போக்கு வரத்து விதிமீறல்களுக்கான புதிய அபராத தொகை வசூலிக்கும் நடைமுறையை, மூன்று மாதங்களுக்கு பின் அமல்படுத்தப் போவதாக, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

சாலை விபத்துகளில் உயிரிழப்பு அதிகரித்து வருவதை தவிர்ப்பதற்காக, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு, கடுமையான அபராதம் விதிக்கும் வகையிலான, புதிய சட்ட திருத்தம், பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம், ஏற்கனவே இருந்ததை விட, 10 மடங்கு அதிகரித்துள்ளதாக, வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்துஉள்ளனர்.

இந்த புதிய சட்டம், பல மாநிலங்களிலும் அமலுக்கு வந்துள்ள நிலையில், அபராத தொகையை குறைப்பது குறித்து, அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என, மத்திய அரசு தெரிவித்துஉள்ளது. இதையடுத்து, முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தில், இந்த புதிய சட்டத்தை, மூன்று மாதங்களுக்கு பின், அமல்படுத்தப் போவதாக, மாநில அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து, மாநில அரசு அதிகாரிகள் கூறுகையில், 'போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் குறித்து, மூன்று மாதங்களுக்கு, வாகன ஓட்டிகளிடம் எடுத்துக் கூறி, விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும். அதற்கு பின், இது, நடைமுறைக்கு வரும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X