பொது செய்தி

இந்தியா

மேப்பிங் செய்யும் பணியில் ட்ரோன்கள்

Added : செப் 16, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement

புதுடில்லி: வரலாற்று ரீதியாக நாட்டை மேப்பிங் செய்யும் பணியில் சுமார் 300 ட்ரோன்கள் ஈடுபட உள்ளது.latest tamil news
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: இந்தியாவின் பழமையான விஞ்ஞானதுறை மற்றும் சர்வே ஆப் இந்தியா ஆகியவை இணைந்து நிலப்பரப்புகளை டிஜிட்டல் மயமாக்கலை செயல்படுத்த உள்ளது.இதன் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நாட்டின் 75 சதவீத நிலபரப்பை டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளது.


latest tamil newsஇதற்காக அரியானா மாநிலத்தில் 6 மாவட்டங்கள் கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா இரண்டு மாவட்டங்களில் ட்ரோன் அடிப்படையிலான மேப்பிங் பயிற்சிகளை மேற்கொள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இதற்காக, சுமார் 400 முதல் 500 கோடி வரையில் செலவாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

சர்வே ஆப் இந்தியாவின் இயக்குனர் ஜெனரல் கிரிஷ்குமார் கூறுகையில், மேப்பிங் நோக்கங் களுக்காக நாங்கள் முன்னர் வான்வழி புகைப்படத்தை பயன்படுத்தினோம். ஆனால் அது விலை உயர்ந்தது. அதே நேரத்தில் ட்ரோன்களை பயன்படுத்த இது சரியான நேரம். மேலும் துல்லியமான வரை படங்கள் கிடைப்பதன் மூலம் கிராம மக்கள் சொத்து அடையாளங்களையும், தங்களின் நிலங்களுக்கு முறையான சட்டப் பட்டங்களை பெற முடியும் என கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
16-செப்-201912:57:32 IST Report Abuse
Vijay D Ratnam நல்ல விஷயம் ட்ரோன் இப்போது பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இப்போது மூன்றாவது கண் என்று சிசிடிவி கேமிராக்கள் எப்படி காவல்துறைக்கு உதவியாக இருக்கிறதோ அது போல இனி ட்ரோன் பேருதவியாக இருக்கும். மத்திய அரசு ஒவ்வொரு கலெக்டர் அலுவலகத்துக்கும் ஒவ்வொரு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கும் ஒரு ட்ரோன் வழங்கலாம். அதன் மூலம் கலெக்டர் அலுவலகம் மட்டுமல்ல டெல்லியில் இருந்துகொண்டு கூட நாட்டின் இண்டு இடுக்கு விடாமல் கண்காணிக்க முடியும். குறிப்பாக சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ள பகுதிகள், மலைக்கிராமங்கள், காட்டுப்பகுதிகளை கண்காணிக்கலாம். மக்கள் புரிந்துகொள்ள வசதியாக ட்ரோன் டுடே என்று டிவிக்களில் சிறப்பு செய்திகள் கூட வெளிவரலாம்.
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
16-செப்-201911:06:08 IST Report Abuse
venkatan எல்லோர் கைகளிலும் அதாவது,95%மக்களுக்கு மேல் கூட இருக்கலாம்.(எல்லோர் வீட்டிலும்கழிப்பரை இருக்குதோ இல்லையோ)அப்படி இருக்கையில்,₹500/-க்குமேல் பரிவர்தனையை டிஜிட்டல் முறையில் செய்தால்,கள்ள நோட்டு,வரி மோசடி போன்றவற்றை தடுக்கலாம்.
Rate this:
Cancel
Nagarajan Duraisamy - Fremont,California,யூ.எஸ்.ஏ
16-செப்-201910:15:14 IST Report Abuse
Nagarajan Duraisamy நல்ல முயற்சி, படத்தில் இருப்பது சீன நாட்டு தயாரிப்பு ட்ரொன், நம்ம நாட்டு தயாரிப்பு ஏதாவது இருந்தா நன்மை. ஆனால், இவர்கள் கூறும் செலவு மிக அதிகம்...ஊழல் தடுப்பு துறையினர் விசாரிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X