புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக வந்த, மாட்டு வண்டியின் மாதிரி வடிவத்தை, மத்திய கலாசாரத்துறை அமைச்சர், பிரகலாத் படேல், ஏலம் கேட்டுள்ளார்.
பிரதமர் மோடியின், பயணங்கள், விழாக்கள் மற்றும் சந்திப்புகளின் போது, அவருக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்கள், நேற்று முன்தினம் முதல், 'ஆன்லைன்' மூலம், ஏலத்துக்கு வந்துள்ளன. இந்த பொருட்களை www.pmmementos.gov.in என்ற இணையத்தளத்தில், ஏலத்தில் வாங்கலாம். இந்த விற்பனை, அடுத்த மாதம், 3ம் தேதி முடிவு பெறுகிறது. இதில், 200 முதல், 2.5 லட்சம் ரூபாய் வரையிலான பொருட்கள் ஏலம் விடப்பட்டு உள்ளன. இதில் திரளும் தொகை, கங்கை நதி துாய்மை திட்டத்திற்கு பயன்படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு பரிசாக வந்த, மாட்டு வண்டியின் மாதிரி வடிவத்தை, மத்திய கலாசாரத்துறை அமைச்சர், பிரகலாத் படேல், ஏலம் கேட்டுள்ளார். இந்த மாட்டு வண்டி மாதிரி வடிவத்தின் ஆரம்ப விலை, 1,00௦ ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2,100 ரூபாய்க்கு, இதை, அமைச்சர் பிரகலாத் படேல், ஏலம் கேட்டுள்ளார். ஹரியானா கைவினை கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட, இந்த மாட்டு வண்டியின் மாதிரி வடிவம், அமைச்சருக்கு கிடைக்குமா என்பது, அக்., 3ல் தெரியும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE