சம்பவம் செய்தி

தமிழ்நாடு

24 இளம்பெண்களை கடத்தி உல்லாசம்; 'டுபாக்கூர்' போலீஸ் எஸ்.ஐ., சிக்கினார்

Added : செப் 16, 2019 | கருத்துகள் (42)
Share
Advertisement
சென்னை : சென்னை, எழும்பூரைச் சேர்ந்த, 19 வயது இளம்பெண்ணை காணவில்லை என, அவரது பெற்றோர், அப்பகுதியில் உள்ள, காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, எழும்பூர் போலீசார், தனிப்படை அமைத்து, அப்பெண்ணை தீவிரமாக தேடினர். விசாரணையில், அந்த இளம்பெண், அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில், தனியார் நிறுவனம்
 24 இளம்பெண்களை கடத்தி உல்லாசம்;  'டுபாக்கூர்' போலீஸ் எஸ்.ஐ., சிக்கினார்

சென்னை : சென்னை, எழும்பூரைச் சேர்ந்த, 19 வயது இளம்பெண்ணை காணவில்லை என, அவரது பெற்றோர், அப்பகுதியில் உள்ள, காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, எழும்பூர் போலீசார், தனிப்படை அமைத்து, அப்பெண்ணை தீவிரமாக தேடினர். விசாரணையில், அந்த இளம்பெண், அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்ததும், நிறுவனத்தை நடத்தி வந்த, ராஜேஷ் பிரித்வி, 29 என்பவரால், திருப்பூருக்கு கடத்தப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.

தனிப்படை போலீசார், திருப்பூர் அடுத்த, நொச்சிப்பாளையத்திற்கு சென்று, ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த, இளம்பெண்ணை மீட்டு, 9ம் தேதி, நீதிமன்றம் வாயிலாக, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தலைமறைவாக இருந்த, ராஜேஷ் பிரித்வியை தேடி வந்தனர். நேற்று மதியம், இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்ற, ராஜேஷ் பிரித்வி, தன்னுடன் வருமாறு அவரை அழைத்து, கொலை மிரட்டல் விடுத்தார்.

தகவலறிந்த தனிப்படை போலீசார், ராஜேஷ் பிரித்வியை கைது செய்தனர். அவரிடம் இருந்து, போலீஸ் எஸ்.ஐ., சீருடை, போலி அடையாள அட்டை, ஆதார் மற்றும் பான் கார்டு, வாக்காளர் அட்டை, கைவிலங்கு ஆகியவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசாரிடம், ராஜேஷ் பிரித்வி அளித்துள்ள வாக்குமூலம்: என் சொந்த ஊர், திருப்பூர் மாவட்டம், நொச்சிப்பாளையம். 7ம் வகுப்பு படித்துள்ளேன். 2014ல், சென்னைக்கு வந்து, ஓட்டலில் வேலை பார்த்தேன். இளம்பெண்களுக்கு திருமண ஆசை காட்டி, உல்லாசம் அனுபவித்து, நகை, பணம் பறித்து, சொகுசாக வாழ வேண்டும் என, திட்டம் தீட்டினேன்.அ தற்காக, சமூகவலைதளமான முகநுால் பக்கத்தில், போலீஸ் எஸ்.ஐ., என, சீருடை அணிந்த என் படங்களை வெளியிட்டேன். அதை நம்பிய இளம்பெண்களுக்கு, திருமண ஆசை காட்டி, உல்லாசம் அனுபவித்தேன்.

மேலும், 'மேட்ரிமோனியல்' இணையதளம் வாயிலாக, பெண்களுக்கு திருமண ஆசை காட்டி, உல்லாசம் அனுபவித்து, அவர்களிடமும், இதே பாணியில், பணம், நகை பறித்தேன். ஒரு பெண்ணுடன், நான்கு நாட்கள் மட்டுமே குடும்பம் நடத்துவேன். பின், உல்லாச வீடியோக்களை, முகநுாலில் வெளியிடுவேன் என மிரட்டியே, அவர்களை கழற்றி விடுவேன். 2016ல், ஆந்திர மாநிலம், திருப்பதி, காளஹஸ்தியைச் சேர்ந்த, மூன்று இளம்பெண்களுக்கு, திருமண ஆசை காட்டி, கணவன், மனைவி போல நெருக்கமாக இருந்து, நகை, பணம் அபகரித்தேன். அவர்கள் போலீசில் புகார் அளித்துவிட்டனர்.

அந்த ஆண்டு, கோவையில் பதுங்கி இருந்த என்னை, ஆந்திர போலீசார் கைது செய்தனர். கருமத்தம்பட்டி பஸ் நிலையம் அருகே, அவர்களை ஏமாற்றி ஓட்டம் பிடித்தேன். மோசடி செய்த பணத்தில், சென்னை, அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில், சுய தொழில் துவங்குவதற்கு கவுன்சிலிங் அளிக்கும் நிறுவனம் துவக்கினேன்.

வாடிக்கையாளர்களின் மகன், மகள்களுக்கு, பிரபல கல்லுாரிகளில், மருத்துவ சீட் வாங்கித் தருவதாக, 30 லட்சம் ரூபாய் மோசடி செய்தேன். மேலும், என் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இளம்பெண்களை, ரகசியமாக படம் எடுத்து, அவர்களின் அழகை வர்ணித்து, என் இச்சையை தீர்த்துக்கொண்டேன். இதுபோல, 24 இளம்பெண்களை, என் சொந்த ஊருக்கு காரில் கடத்தி, உல்லாசம் அனுபவித்துள்ளேன். என் மீது, திருச்சி, கோவை, திருப்பூர் மற்றும் ஆந்திர மாநில காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.

சென்னை, எழும்பூரைச் சேர்ந்த இளம்பெண்ணிடம், 'நான் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட். பீஹார் மாநிலத்தில், எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளேன்' எனக்கூறி தான், மோசடி செய்தேன். தினேஷ், ராஜேஷ் பிரித்வி, ஸ்ரீராமகுரு, தீனதயாளன் என, வெவ்வேறு பெயர்களை கூறி, ஏழு இளம்பெண்களை திருமணம் செய்து, மோசடி செய்துள்ளேன். இவ்வாறு, ராஜேஷ் பிரித்வி வாக்குமூலம் அளித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
20-செப்-201920:29:41 IST Report Abuse
ராஜேஷ் எப்படி இந்த தைரியம் வந்தது ? உண்மையில் போலீசில் பலர் இப்படிதான் இருக்கிறார்கள் அதனால் வந்த விளைவு
Rate this:
Cancel
Jaykumar Dharmarajan - Madurai,இந்தியா
20-செப்-201913:37:51 IST Report Abuse
Jaykumar Dharmarajan ஒரு சில ஆண்டுகளுக்கு முன் இல்லாத இது போன்ற செயல்களுக்கு முழுக்க முழுக்க சின்ன திரையும் அதில் வரும் சீரியல்கள் மட்டுமே காரணம் என்பது என் கருத்து. உண்மையும் கூட. இதில் முக்கியமாக இளம் பெண்கள் எப்படி எல்லாம் ஏமாற்றப் படுகிறார்கள் என்பதை பாடம் நடத்துவது போல் பல சீரியல்கள் எடுத்தும் அதன் முன் எப்படி ஆரம்பம் ஆகிறது என்பதை பார்த்தே பல பெண்கள் வாழ்வு சீரழிந்து விடிகிறது. ஏனென்றால் ஒரு சில சீரியல்கள் முடிவதற்கே சில ஆண்டுகள் ஆகின்றன
Rate this:
Cancel
brganeshbabu - Stamford,யூ.எஸ்.ஏ
19-செப்-201918:19:04 IST Report Abuse
brganeshbabu என்ன ஜென்மம் டா நீ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X