மேற்குவங்கத்தை தொடர்ந்து தெலுங்கானாவும் அடம்

Updated : செப் 16, 2019 | Added : செப் 16, 2019 | கருத்துகள் (40)
Share
Advertisement

ஐதராபாத் : புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை அமல்படுத்தப் போவதில்லை என மேற்குவங்க அரசு அறிவித்து 4 நாட்களே ஆன நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் தங்கள் மாநிலத்திலும் புதிய சட்டம் அமல்படுத்தப்படாது என அறிவித்துள்ளார்.



latest tamil news



போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அதிகப்படியாக அபராதம் விதிக்க வழிவகை செய்யும் புதிய மோட்டார் வாகன சட்டம் செப்.,1 முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தும் அபராத தொகையை குறைக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இந்த புதிய சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்த முடியாது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி 4 நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார்.


latest tamil news



மம்தாவை தொடர்ந்து சந்திரசேகர ராவும் புதிய சட்டத்தை அமல்படுத்த மறுத்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தை நாங்கள் அமல்படுத்த மாட்டோம். எங்களுக்கென தனிச்சட்டம் கொண்டு வருவோம். கடுமையான அபராதத்தை விதித்து மக்களை வதைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்றார்.


latest tamil news


தெலுங்கானா போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்து அமல்படுத்த அரசு முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
16-செப்-201922:13:53 IST Report Abuse
Mannai Radha Krishnan மோட்டார் வாகனத்தில் செல்பவர்கள் முட்டிக் கொண்டு சாவட்டும். எங்களுக்கு பதவி தான் முக்கியம்
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
16-செப்-201918:59:37 IST Report Abuse
Rajas இதில் என்ன அடம் என்று தலைப்பு போடப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. மத்திய அரசு பொது சட்டம் போட்டாலும் மோட்டார் வாகன பிரிவு சட்டம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் தானே வருகிறது. தங்களின் மாநிலத்திற்கான சட்டத்தை அவர்கள் தானே முடிவெடுத்து கொள்ள முடியும்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
16-செப்-201918:20:47 IST Report Abuse
Natarajan Ramanathan ஹெல்மெட் போடாவிட்டாலோ, சீட் பெல்ட் அணியா விட்டாலோ மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லை. மற்ற விஷயங்களில் மிக கடுமையான அபராதமும் சிறை தண்டனை யும் அவசியம் விதிக்க வேண்டும்.
Rate this:
Rajas - chennai,இந்தியா
16-செப்-201918:52:40 IST Report Abuse
Rajasநீங்கள் சொல்வது தான் சரி....
Rate this:
visu - Pondicherry,இந்தியா
16-செப்-201920:03:25 IST Report Abuse
visuசரியான கருத்து license RC இன்சூரன்ஸ் இல்லாததார்க்கு, போக்குவரத்துக்கு விதிகளை மீறுவதெற்க்கு கடுமையான அபராதம் விதிக்கலாம் . ஹெல்மெட் ,அணியாதது PUC certificate போன்றவற்றிற்கு சிறிய அபாரதமே போதும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X