மோடி நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்பது உறுதி

Updated : செப் 16, 2019 | Added : செப் 16, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement

வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடக்கும் "Howdy Modi" நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்ள உள்ளதை வெள்ளைமாளிகை உறுதி செய்துள்ளது.



latest tamil news



இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்.,22 ம் தேதி அதிபர் டிரம்ப், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகருக்கு செல்ல உள்ளார். அங்கு இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் பங்கேற்க உள்ளார். "Howdy Modi" நிகழ்ச்சி ஒளிமயமாக எதிர்காலத்தையும், கனவுகளையும் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வாக இருக்கும். இதில் ஒரு லட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


latest tamil news


மோடி, மீண்டும் இந்திய பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஹூஸ்டன் நகருக்கு சென்று, அங்கு இந்திய-அமெரிக்க சமூகத்தினரிடையே உரையாற்ற உள்ளார். ஹூஸ்டன் என்ஆர்ஜி கால்பந்து மைதானத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 50,000 க்கும் அதிகமானவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். "Howdy Modi" என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி டெக்சாஸ் இந்திய கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


latest tamil news


செப்.,21 ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்லும் மோடி, செப்.,23 முதல் 27 வரை நியூயார்க் நகரில் நடக்கும் ஐ.நா., மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார். இந்த மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேச மோடி திட்டமிட்டுள்ளார்.

"Howdy Modi" நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க ஒப்புதல் தெரிவித்துள்ள டிரம்ப்பிற்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். டிரம்ப்பின் இந்த முடிவால் இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்புறவு மேலும் வலுப்பெறும் எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
16-செப்-201915:11:35 IST Report Abuse
Viswam சில மாதங்களுக்கு முன்பு இந்த செய்தி வந்த போது கோ பேக் மோடி கூட்டம் ஐம்பதாயிரமாவது மண்ணாவது என்று கிண்டல் அடித்தது நியாபகம் வருகிறது. பாக்கி பக்கிகளுடன் நம்ம ஊர் ஜெலுசில் கும்பலும் வயிறுஎறிய இந்த செய்தியை படிப்பார்கள். அது போகட்டும், சந்தடி சாக்கில் இந்திய கூட்டத்துக்குள் டிரம்ப் நுழைந்து இந்தியர்களுக்கு மத்தியில் தனது பாப்புலாரிட்டியை இந்த மாதிரி அதிகரிக்க முயலுவார் என்று எதிர்பார்க்கவில்லை.
Rate this:
Cancel
chakra - plano,யூ.எஸ்.ஏ
16-செப்-201914:45:10 IST Report Abuse
chakra யாரும் இங்கே மேகத்தில் ஒளிந்து தாக்குதல் நடத்த சொன்னவரை தேடவில்லை
Rate this:
Cancel
16-செப்-201912:35:28 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் உபிஸ் கதறல் இன்று மிக அதிகமாக இருக்கும். இருக்காதா பின்னே அமெரிக்காவின் தேர்தல் முடிவுகளையே மாற்றும் வல்லமை மோடிக்கு உண்டு.
Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
16-செப்-201915:16:34 IST Report Abuse
Nallavan Nallavanசும்மாவா ........... அமெரிக்காவே எங்களுக்கு எதிரியா இருந்தாலும் இந்த ஆளை அமெரிக்காவுல உடாதீங்க -ன்னு காங்கிரஸ் எம்.பி.க்கள் கையெழுத்துப் போட்டு அனுப்புனதை ஷாஹி ஹல்வா, ஷீர் குருமா, மீட்டா குபானி எல்லாம் சாப்புட்டுக் கொண்டாடுனோமே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X