உண்மை நிச்சயம் வெளியில் வரும்: கார்த்தி

Updated : செப் 16, 2019 | Added : செப் 16, 2019 | கருத்துகள் (79)
Share
Advertisement

புதுடில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ.,யால் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை அமலாக்கத்துறையும் காவலில் எடுத்து விசாரிக்க தீவிரம் காட்டி வருகிறது.



latest tamil news



இந்நிலையில் சிதம்பரத்தின் 74வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது மகனும் சிவகங்கை தொகுதி காங்., எம்.பி.,யுமான கார்த்தி சிதம்பரம், தனது தந்தைக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார் .அந்த கடிதத்தை கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.


latest tamil news


அதில் அவர், "உங்களுக்கு இன்று 74 வயது. எந்த 56 (பிரதமர் மோடி)ம் உங்களை தடுக்க முடியாது. நீங்கள் இல்லாததால் உங்கள் பிறந்த நாளை கொண்டாடவில்லை. இன்று நாட்டில் சிறிய விஷயத்தை கூட பெரிய அளவில் கொண்டாடுகிறார்கள். உங்களின் பிறந்தநாள் அது போல் இல்லை. நீங்கள் இல்லாதது வேதனை அளிக்கிறது. நீங்கள் வீடு திரும்பிய பிறகு கேக் வெட்டி கொண்டாடுவோம்.


latest tamil news


தற்போது நடக்கும் அரசியல் நாடகங்களுக்கு எதிராக தோட்டாவை போல் சீறிப்பாய்ந்து வெளியே வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. உண்மை வெளியில் வரும் நாளுக்காக காத்திருக்கிறோம்". இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாட்டில் நடக்கும் சந்திரயான் 2 நிலவில் தரையிறங்குவதை பிரதமர் மோடி நேரில் பார்த்தது, அசாமில் தேசிய குடியுரிமை பட்டியல் வெளியிட்டது, காஷ்மீர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பட்டியலிட்டுள்ள கார்த்தி, பிரதமர் மோடி மற்றும் பா.ஜ., அரசை விமர்சித்தும் எழுதி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CSCSCS - CHENNAI,இந்தியா
20-செப்-201900:27:45 IST Report Abuse
CSCSCS அரிச்சந்திரனின் வாரிசுகள் . நிச்சயம் வெளிவரும் உண்மைக்காக நாடே காத்திருக்கிறது
Rate this:
Share this comment
Cancel
17-செப்-201913:28:09 IST Report Abuse
Ragothaman Raghavan அதைத்தானே நாங்களும் சொல்கிறோம்
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
17-செப்-201903:14:49 IST Report Abuse
meenakshisundaram அதைத்தானே நாங்க சொல்றோம் , உண்மை வெளி வரும்போது சீனா அண்ணாச்சி 'உள்ளேயே'தான் இருப்பார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X