சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலூர் அருகே கல்லூரி பஸ் கவிழ்ந்து 24 மாணவர்கள் காயம்

Updated : செப் 16, 2019 | Added : செப் 16, 2019
Advertisement
கல்லூரி , Cuddalore,கடலூர்

கடலூர்: திட்டக்குடி அருகே தனியார் கல்லூரி பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 24 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
திட்டக்குடி அடுத்த தொழுதூரில் உள்ள தனியார் கல்லூரி பேருந்து இன்று (16ம் தேதி) காலை கருவேப்பிலங்குறிச்சியில் மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு வந்தது. கல்லூரி அருகே மினிபஸ்சை முந்திச் செல்ல முயன்ற போது கல்லூரி பஸ் சாலையோர சேற்றில் சிக்கி கவிழ்ந்தது.
இதில் கல்லூரி பஸ்சில் பயணம் செய்த 24 பேர் காயமடைந்தனர். தொழுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காயமுற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயமடைந்த நான்கு மாணவிகள் உள்ளிட்ட ஐந்து பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X