பொது செய்தி

இந்தியா

ம.பி.,ல் கனமழை: 46,000 குடும்பங்கள் பாதிப்பு

Updated : செப் 16, 2019 | Added : செப் 16, 2019
Share
Advertisement

போபால் : மத்திய பிரதேசத்தின் மேற்கு பகுதியில் சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 46,000 க்கும் அதிகமான குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளன.



latest tamil news


நீமுச் மற்றும் மண்ட்சவுர் ஆகிய 2 மாவட்டங்களில் மட்டும் சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று (செப்.,16) முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.


latest tamil news



100 முதல் 125 கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கி உள்ளன. சில கிராமங்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கி உள்ளதால் அங்கிருந்த மக்கள் அனைவரும் காலி செய்யப்பட்டுள்ளனர். விடாது பெய்யும் கனமழையால் பல பகுதிகளில் மீட்புப் பணிகளும், நிவாரணப் பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் கனமழையால் காந்திசாகர் அணை நிரம்பியதால், அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டு விநாடிக்கு 4.93 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் மாநிலத்தின் பெரும் பகுதி நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X