பொது செய்தி

இந்தியா

டிரெண்டிங் ஆகும் 'ஹவுடி மோடி'

Updated : செப் 16, 2019 | Added : செப் 16, 2019 | கருத்துகள் (67)
Advertisement

புதுடில்லி : அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ள 'ஹவுடி மோடி' நிகழ்ச்சி தற்போது டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

செப்.,23 முதல் 27 வரை நியூயார்க் நகரில் நடக்கும் ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, உரையாற்ற உள்ளார். இதற்காக செப்.,21 ம் தேதி அமெரிக்கா செல்லும் மோடி, செப்.,22 அன்று ஹூஸ்டன் நகரில் இந்திய - அமெரிக்க வம்சாவளியினரிடையே உரையாற்ற உள்ளார்.
'Howdy Modi' என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி அமெரிக்க நேரப்படி காலை 10 மணிக்கும், இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கும் நடக்க உள்ளது. இவ்விழாவில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் இணைந்து உரையாற்ற உள்ளனர்.
மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்து கொள்வதை வெள்ளை மாளிகையும் உறுதி செய்துள்ளது. இந்நிலையில் இந்திய அளவில் #HowdyModi என்ற ஹெஷ்டாக் உருவாக்கப்பட்டு டிரெண்டிங் ஆக்கப்பட்டு வருகிறது. இந்த ஹெஷ்டேக்கின் கீழ் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கருத்து பதிவிட்டுள்ளனர்.
ஹவுடி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏற்கனவே 50,000 க்கும் அதிகமானவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இருப்பினும் இருநாட்டு தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியை மேலும் பிரபலமாக்க https://www.howdymodi.org/ என்ற இணையதளமும் துவக்கப்பட்டுள்ளது. இதில் ஹவுடி மோடி குறித்த அனைத்து தகவல்களும் பதிவிடப்பட்டு வருகின்றன.

Advertisement
வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
16-செப்-201920:31:47 IST Report Abuse
Ramesh Sargam இந்த டிரெண்டிங் "ஹவுடி இம்ரானுக்கு" இருக்குமா??? அது சரி, அதெல்லாம், அதாவது "ஹவுடி இம்ரான்" எல்லாம் மொதல்ல நடக்குமா?
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
16-செப்-201918:58:14 IST Report Abuse
அம்பி ஐயர் சும்மாவே இருக்க மாட்டீங்களா....?? கொளுத்திப் போட்டுட்டீங்களா.....??? இங்க பல பேருக்கு வயிறு மட்டும் இல்லாம... எங்கெங்கயோ எரியுமே....
Rate this:
Share this comment
Cancel
RGOPAL -  ( Posted via: Dinamalar Android App )
16-செப்-201918:18:19 IST Report Abuse
RGOPAL aJust like Times of India DINAMALAR should also introduce upvote and downvote
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X