" காஷ்மீர் செல்வேன் "- சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி

Updated : செப் 16, 2019 | Added : செப் 16, 2019 | கருத்துகள் (78)
Advertisement

ஜம்மு: காஷ்மீரில் ஐகோர்ட்டை கூட நாட முடியாத அளவிற்கு சூழல் நிலவினால் அது சாதாரண விஷயமாக கருத முடியாது. தேவைப்பட்டால் நானும் காஷ்மீர் செல்வேன் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கோகோய் காஷ்மீர் தொடர்பான விசாரணையின் போது கூறினார்.





காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் அங்கு அரசியல் தலைவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் காஷ்மீரை சேர்ந்த காங்., மூத்த தலைவரான குலாம்நபி ஆசாத் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதில் காஷ்மீர் சென்று தனது குடும்பத்தினரை சந்திக்க முடியாமல் தவிப்பதாக கூறி இருந்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.


அசாதாரண சூழல் ?


காஷ்மீர் செல்ல குலாம்நபி ஆசாத்துக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் அங்கு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து அறிக்கையாக தாக்கல் செய்யவும் கேட்டுள்ளது. நீதிபதிகள் தங்களின் உத்தரவில் :





தேசிய பாதுகாப்பை மனதில் வைக்கும் போது அங்கு இயல்பு வாழ்க்கையும் நிலவிட மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரிகள் இயல்புடன் செயல்பட அனுமதிக்க வேண்டும். அங்கு அசாதாரண சூழல் நிலவுவதாக தகவல்கள் வருகிறது. மேலும் அங்குள்ள ஐகோர்ட்டை கூட சிலர் அணுக முடியவில்லை என்கின்றனர். இது போன்ற நிலைமை இருந்தால் இது மிக சீரியஷானது. இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறுகையில்; " தேவைப்பட்டால் காஷ்மீருக்கு நானும் செல்வேன் " என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muraleedharan.M - Chennai,இந்தியா
18-செப்-201904:40:20 IST Report Abuse
Muraleedharan.M இருக்கின்ற வேலையை விட்டு இல்லாத வேலைக்கு செல்கிறார்
Rate this:
Share this comment
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
16-செப்-201922:50:23 IST Report Abuse
Rajagopal நீதிபதி அவர்கள் இந்திய-பாகிஸ்தான் லைன் ஆப் கண்ட்ரோல் வழியாக உலாவி விட்டு வருவாரா? அங்கே தான் பிரச்சனையின் ஆரம்பமே. அங்கே அவர் முதலில் செல்லட்டும். அவர் செல்லும் பொது, அவரது நாடு நிலைமையை பாதிக்காமலிருக்க, இந்திய ராணுவத்தை அங்கிருந்து விலகி சற்று நேரம் நிற்கச் சொல்வோம். அவர் அங்கே போய் உலாவி வரட்டும். நிலைமை என்ன என்று அறிந்து கொண்டு, காஷ்மீருக்குள் வரட்டும். எப்பொழுதும் மனித உரிமைக்கு குரல்கள் கொலை செய்தவர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் மட்டும்தான் பாடு படுகின்றன.
Rate this:
Share this comment
Cancel
16-செப்-201922:31:05 IST Report Abuse
முருகன் சுப்ரீம் கோர்டை மதிப்போம் அதே நேரத்தில் தலைமை நீதிபதி நான் காஷ்மீர் செல்வேன் என்பது சற்று நெருடலாக உள்ளது. நமது அண்டை நாடு காஷ்மீர் விவாகரத்தை சர்வதேச பிரச்சினை ஆக்க முயற்ச்சிப்பதை தலைமை நீதிபதியாள் தடுக்க இயலாது அதனை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசால் மட்டுமே தடுக்க முடியும். காஷ்மீர் விசயத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிடாமல் இருப்பதே இந்த தேசத்திற்கு மிக நல்லது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X