அரசியல் செய்தி

தமிழ்நாடு

"திணிக்க நினைச்சா குமட்டும்" - கமல்

Updated : செப் 16, 2019 | Added : செப் 16, 2019 | கருத்துகள் (249)
Advertisement

சென்னை: அமித்ஷாவின் இந்தி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமல் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:






இந்தியா இன்னும் சுதந்திர நாடாக இருப்பதை நிருபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். புதிய திட்டங்களோ சட்டங்களோ இயற்றப்படும் பொழுது அது மக்களிடம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். வெள்ளையனை வெளியேற்றியது. வெற்று நாயகத்திற்காக அல்ல ஜனநாயகத்திற்காக. "ஹிந்தி" தொலைக்காட்சியில் அமர்ந்து கொண்டு "தமிழ்" மொழி தான் "ஹிந்தி, "சமஸ்கிருதம்" விட கெத்துன்னு "இங்கிலிஷில்" பேச எங்க ஆண்டவரால் மட்டுமே சாத்தியம்.
பல ராஜாக்கள் தங்கள் ராஜ்யங்களை விட்டுக்கொடுத்து உருவானதுதான் இந்தியா. ஆனால் விட்டுக் கொடுக்க முடியாது என்று உறுதியாக பல இந்தியர்கள் பல மாநிலங்கள் சொன்ன விஷயம் எங்கள் மொழியும் கலாச்சாரமும் என்பதுதான்.
1950ல் இந்தியா குடியரசான போது அதே சத்தியத்தை மக்களுக்கு அரசு செய்தது. அந்த சத்தியத்தை திடீரென்று எந்த ஷாவோ, சுல்தானோ, சாம்ராடோ மாற்றிவிட முயற்சிக்கக் கூடாது. ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஒரு சிறிய போராட்டம், சிறிய வெற்றி. எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் துவங்கினால், அது அதைவிட பன்மடங்கு பெரிதாக இருக்கும் அந்த ஆபத்து இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டிற்கோ தேவையற்றது.






தேசிய கீதத்தை எந்த மொழியில் ?


பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் தேசிய கீதத்தை அவர்கள் மொழிகள் பாடுவதில்லை. வங்காளிகளைத் தவிர. இருப்பினும் அதை சந்தோஷமாக நாங்கள் பாடிக் கொண்டிருக்கிறோம், பாடிக்கொண்டிருப்போம். காரணம் அதை எழுதிய கவிஞர் எல்லா கலாச்சாரத்திற்கும் எல்லா மொழிக்கும் தேவையான இடத்தையும் மதிப்பையும் அதில் கொடுத்திருந்தார்.
இந்தியா என்பது ஒரு அற்புத விருந்து, அதை கூடி உண்போம். திணிக்க நினைத்தால் குமட்டிவிடும். தயவுசெய்து அதை செய்யாதீர்கள். வேற்றுமையில் ஒற்றுமையை எங்களால் காண முடியும்.
வாழிய செந்தமிழ்!வாழ்க நற்றமிழர்!வாழிய பாரத மணித்திரு நாடு!
இவ்வாறு கமல் கூறியுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (249)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
20-செப்-201918:52:11 IST Report Abuse
Swaminathan Chandramouli கமலுக்கு ஏன் குமட்டுது ? அப்படி யார் எங்கே எதை திணித்து விட்டார்கள் ? கமல் இந்த விஷயத்தை விரிவாக சொல்லவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Jaykumar Dharmarajan - Madurai,இந்தியா
20-செப்-201914:05:26 IST Report Abuse
Jaykumar Dharmarajan செய்தி: உள்துறை அமைச்சர் திரு அமீத் ஷா அவர்கள் ஹிந்தி தினத்தன்று ஒரே தேசம் ஒரே மொழி என்று மட்டும் தான் கூறினார், இது பொதுவாக எந்த ஒரு விசேஷ தினத்தன்றும் கூறும் செய்தியை போன்றதே. அவர் ஒரே தேசம் இந்திய ஒரே மொழி ஹிந்தி என்று கூறவில்லையே. ஹிந்தி திணிப்பிற்கும் ஹிந்தி கற்றுக் கொள்ளுங்கள் என்பதன் சரியான விளக்கத்தை யாரவது கூற முடியுமா? இல்லை இப்படி வீர வசனம் பேசுவதால் தமிழ் தான் அழிந்து விடுமா இல்லை சுய நலம் தேடும் ஹிந்தி தெரிந்த முன்னணி நடிகர்கள் பாலிவுட் சென்றாலும் ஹிந்தியில் பேச மாட்டோம் என்று சத்தியம் செய்ய தயாரா?
Rate this:
Share this comment
Cancel
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
19-செப்-201920:26:52 IST Report Abuse
naadodi இந்தி படிக்கக்கூடாது என்று அரசு அளவில் செய்வதும் ஒரு எதிர்மறைத் திணிப்புதானே அது இனிக்குமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X