சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜீவசமாதி நாடகம்: சாமியார் மீது வழக்கு

Updated : செப் 16, 2019 | Added : செப் 16, 2019 | கருத்துகள் (17)
Advertisement
ஜீவசமாதி நாடகம்: சாமியார் மீது வழக்கு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் அருகே ஜீவசமாதி அடைவதாக கூறி உண்டியல் வசூலித்த சாமியார் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
சிவகங்கை அருகே, பாசாங்கரையில் பிறந்தவர், இருளப்பசுவாமி, 77. இவர், 12 வயதில் இருந்தே சிவபக்தர். கடந்த ஆண்டு வரை, திருவண்ணாமலை உட்பட சிவத்தலங்களுக்கு நடந்தே சென்றுள்ளார். 1700 கி.மீ., க்கு மேல் பாதயாத்திரை சென்றுள்ளார். சில தினங்களுக்கு முன், 'செப்., 12 இரவு, 12:00 மணி முதல் மறுநாள் காலை, 5:00 மணிக்குள் என் உடலை விட்டு, உயிர் பிரியும். அன்றே எனக்கு ஜீவசமாதி அடைவதாக கூறினார்.
ஆனால் தொடர்ந்து காலை 5.45 மணியளவில் ஜீவசமாதி முடிவை சிவபக்தர் ஒத்தி வைத்தார். சமாதி கட்டும் பணிகள் நிறைவடையவில்லை என்பதால் ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் உண்டியல் வசூலிக்கும் நோக்கத்தில் இவ்வாறு செயல்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து சாமியார் இருளப்பன் மற்றும் அவரது மகன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
19-செப்-201913:52:35 IST Report Abuse
Malick Raja ஏமாறுபவர்கள் இருக்கும்வரை இதுபோன்ற பலரும் இருந்துகொண்டே இருப்பார்கள் . இவர் ஒருவர்தான் பிடிக்கப்பட்டுள்ளார் ..இனியும் லட்சக்கணக்கில் இருப்பதும் உண்மை ..மக்களின் அறியாமை அகல அனைவருமே முயற்சி செய்தால் மட்டுமே இதுபோன்ற நிலையை தவிர்க்க முடியும் என்பதே உண்மை
Rate this:
Share this comment
Cancel
Jayvee - chennai,இந்தியா
19-செப்-201912:48:38 IST Report Abuse
Jayvee புல்லடோசறை வைத்து பள்ளம் தோண்டும்போதே நினைத்தேன் .. இது ஒரு விளம்பர யுக்தி என்று ..
Rate this:
Share this comment
Cancel
Narayan - chennai,இந்தியா
18-செப்-201914:51:33 IST Report Abuse
Narayan வேலை யட்ட மூடர்களின் மூளை யட்ட வார்த்தைகளில் நம்பி ஏமாந்துவிடாதே என்று எம்ஜிய்யார் பாடியிருக்கர்கள் அல்லவா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X