அமலாக்கத்துறையின் அடுத்த 'செக்' காங்.,தலைமைக்கா?

Updated : செப் 16, 2019 | Added : செப் 16, 2019 | கருத்துகள் (26)
Advertisement

புதுடில்லி : ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ.,யால் கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தீவிரமாக முயற்சித்து வருகிறது.


அத்துடன் 2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு வழக்குடன் தொடர்புடைய ஏர்செல் மேக்சிஸ் வழக்கிலும் சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட முன்ஜாமினை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளது 0ஐஎன்எக்ஸ் மீடியாக வழக்கில் சிதம்பரத்தின் காவல் முடிவதற்குள் அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி, காவலில் எடுக்க வேண்டும் என்பதற்காக சிதம்பரத்தின் உதவியாளர், கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை துருவிதுருவி விசாரணை நடத்துகிறது.

சிதம்பரம் கைது செய்யப்பட்ட அதிர்ச்சியில் இருந்து காங்., மீளாத நிலையில், கட்சி தலைமைக்கும், காங்.,ஐ கூண்டோடு கைது செய்யும் விதத்திலான முயற்சியில் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ள கூறப்படுகிறது. விவிஐபி.,க்கு பாதுகாப்புத்துறை சார்பில் ஹெலிகாப்டர் வாங்கியதில் நடந்த அகஸ்தா வெஸ்ட்லாண்ட் ஊழல் வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்துள்ளது.
அகஸ்தா வெஸ்டெலாண்ட் வழக்கில் தொழிலதிபர் ரதுல் புரி என்பவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை முயற்சித்து வருகிறது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை காங்., தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
அகஸ்தா வெஸ்ட்லாண்ட் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் மத்திய அமைச்சர்களான அகமது பட்டேல், வீரப்ப மொய்லி, ஆஸ்கார் பெர்னாண்டஸ் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதால், காங்., தலைமை தற்போது கலக்கத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-செப்-201911:10:38 IST Report Abuse
பச்சையப்பன் ROBER T VADRA RAWKUL MONEY MEGALAI இவர்கள் என்ன தவறு செய்தனர்? நாட்டிற்கு உழைத்தை தவிர? நாட்டிற்காக இரத்தம் சிந்தியவர்கள் இவர்கள் குடும்பம். இவர்கள் ஆட்சி செய்யும் நாளே இந்நாட்டிற்க்கு பொன்னாள். இந்தியா இன்னொரு சோமாலியா ஆகிக் கொண்டு இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
17-செப்-201905:49:58 IST Report Abuse
DARMHAR எப்போது சோனியாவுக்கும் , ராகுலுக்கும் ராபர்ட் வாட்ராவுக்கும் குறைத்த பட்சம் 10 ஆண்டு திஹார் சிறைவாச தீர்ப்பு உச்ச நீதி மன்றம் வழங்குகிறதோ அந்த நாள் இந்திய வரலாற்றில் கொண்டாடப்பட வேண்டிய நன்னாள்
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
17-செப்-201905:16:47 IST Report Abuse
Pannadai Pandian ten years (2004-2009)congress under Sonia's indirect rule looted the nation.....it is a big shame to India.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X