பொது செய்தி

இந்தியா

சந்திரயான்-2ஐ அதிகம் தேடிய பாகிஸ்தான் மக்கள்

Updated : செப் 16, 2019 | Added : செப் 16, 2019 | கருத்துகள் (15)
Share
Advertisement

புதுடில்லி: சந்திரயான்-2, விக்ரம் லேண்டர் குறித்து இந்தியாவைப் போல பாகிஸ்தானிலும் ஆர்வத்தோடு கூகுளில் தேடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.



latest tamil news


இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், செப்., 7ல் நிலவில் தரையிறங்கும் நேரத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின் ஆர்பிட்டரின் தெர்மல் புகைப்படத்தை கொண்டு லேண்டர் இருக்கும் இடத்தை கண்டறிந்தாலும், தகவல் தொடர்பு கொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில் செப்., 6, 7 தேதிகளில் கூகுள் டிரண்ட்களில் சந்திரயான்-2, விக்ரம் லேண்டர், இஸ்ரோ ஆகிய வார்த்தைகள் முன்னிலையில் இருந்தன.


latest tamil news


இதில் வேடிக்கையான தகவல் என்னவெனில், இந்த வார்த்தைகள் டிரண்ட்கள் பாகிஸ்தானிலும் டிரண்ட் ஆகியுள்ளது. அதாவது, இந்தியர்களைப் போல, பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களும் அந்த சொற்களை கூகுள் தேடுபொறியில் பதிவிட்டு தேடியதாக தகவல் வெளியாகியுள்ளது.


latest tamil news


இது குறித்து கூகுள் தரப்பில் வெளியான தகவலின் படி, நள்ளிரவு 2 மணிக்கு மேல் அதிகம் பேர் அந்த சொற்களைத் தேடியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களில் இந்தியாவில் இந்த சொற்களை தேடுவது குறைந்துவிட்ட போதிலும், பாகிஸ்தானில் அதே ஆர்வம் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.


latest tamil news


இந்திய ஊடகங்கள் வாயிலாக மக்கள் தொடர்ந்து தகவல்களைத் தெரிந்து கொண்டதால் இந்தியர்கள் கூகுளில் தேட வேண்டிய அவசியம் ஏற்படாமல் இருந்திருக்கலாம் என்றும், பாக்., ஊடகங்கள் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பாமல் இருந்ததால், அதிகம் தேடப்பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
16-செப்-201921:35:21 IST Report Abuse
Rajagopal பாகிஸ்தானில் பலர் இந்தியத் திரைப்படங்களையும், சுற்றுலா பற்றிய வீடியோக்களையும், அரசியல் நிகழ்ச்சிகளை பற்றிய செய்திகளையும் பார்ப்பதன் காரணம், அவர்களது ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிற ஊடகங்களின் செய்திகளை அவர்கள் நம்புவது இல்லை. பொது மக்கள் நம்மை எதிரிகளாக நினைப்பதில்லை. வெளி நாடுகளில் சென்றால் பாகிஸ்தானியர்கள் நம்முடன் நன்றாகப் பழகுகிறார்கள். மரியாதையோடு நடத்துகிறார்கள். பாஹுபலி படத்தை அத்தனை அவர்கள் புகழ்ந்து நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் தங்களை "தேசி" என்று சொல்லிக் கொள்கிறார்கள். தங்களை பாகிஸ்தானி என்று சொல்வதில். தேசி என்றால் இந்தியன் என்று வட இந்தியாவிலும், வெளி நாட்டிலும் புழங்கும் ஒரு வார்த்தை. பலர் தங்களது நாடு இந்த மாதிரிப் போய் விட்டதே என்ற வருத்தத்தில் இருக்கிறார்கள். இந்தியா மாதிரி செய்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் அவர்களிடம் இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
16-செப்-201920:28:18 IST Report Abuse
Ramesh Sargam அந்த அளவுக்கு ஒரு எதிர்பார்த்தல் அவர்களிடம் இருந்திருக்கிறது. ஹ்ம்ம்... அந்த எதிர்பார்த்தல் என்னவாக இருக்கும் என நமக்கு தெரியும். ஹ்ம்ம்...
Rate this:
Share this comment
Cancel
Naren - Chennai,இந்தியா
16-செப்-201917:13:08 IST Report Abuse
Naren உலக கோப்பை கிரிக்கெட்டுக்கு பிறகு இந்தியாவின் பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்புகளை நொறுக்கி ஏமாற்றிய ஒரு நிகழ்வு என்றால் அது நிலவுக்கு சந்திராயன் 2 அனுப்பிய நிகழ்வுதான். கடந்த சோகங்களை மறக்கவே நினைக்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X