சந்திரயான்-2ஐ அதிகம் தேடிய பாகிஸ்தான் மக்கள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சந்திரயான்-2ஐ அதிகம் தேடிய பாகிஸ்தான் மக்கள்

Updated : செப் 16, 2019 | Added : செப் 16, 2019 | கருத்துகள் (15)
Share
புதுடில்லி: சந்திரயான்-2, விக்ரம் லேண்டர் குறித்து இந்தியாவைப் போல பாகிஸ்தானிலும் ஆர்வத்தோடு கூகுளில் தேடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், செப்., 7ல் நிலவில் தரையிறங்கும் நேரத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின் ஆர்பிட்டரின் தெர்மல் புகைப்படத்தை கொண்டு லேண்டர் இருக்கும் இடத்தை கண்டறிந்தாலும்,

புதுடில்லி: சந்திரயான்-2, விக்ரம் லேண்டர் குறித்து இந்தியாவைப் போல பாகிஸ்தானிலும் ஆர்வத்தோடு கூகுளில் தேடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.



latest tamil news


இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், செப்., 7ல் நிலவில் தரையிறங்கும் நேரத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின் ஆர்பிட்டரின் தெர்மல் புகைப்படத்தை கொண்டு லேண்டர் இருக்கும் இடத்தை கண்டறிந்தாலும், தகவல் தொடர்பு கொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில் செப்., 6, 7 தேதிகளில் கூகுள் டிரண்ட்களில் சந்திரயான்-2, விக்ரம் லேண்டர், இஸ்ரோ ஆகிய வார்த்தைகள் முன்னிலையில் இருந்தன.


latest tamil news


இதில் வேடிக்கையான தகவல் என்னவெனில், இந்த வார்த்தைகள் டிரண்ட்கள் பாகிஸ்தானிலும் டிரண்ட் ஆகியுள்ளது. அதாவது, இந்தியர்களைப் போல, பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களும் அந்த சொற்களை கூகுள் தேடுபொறியில் பதிவிட்டு தேடியதாக தகவல் வெளியாகியுள்ளது.


latest tamil news


இது குறித்து கூகுள் தரப்பில் வெளியான தகவலின் படி, நள்ளிரவு 2 மணிக்கு மேல் அதிகம் பேர் அந்த சொற்களைத் தேடியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களில் இந்தியாவில் இந்த சொற்களை தேடுவது குறைந்துவிட்ட போதிலும், பாகிஸ்தானில் அதே ஆர்வம் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.


latest tamil news


இந்திய ஊடகங்கள் வாயிலாக மக்கள் தொடர்ந்து தகவல்களைத் தெரிந்து கொண்டதால் இந்தியர்கள் கூகுளில் தேட வேண்டிய அவசியம் ஏற்படாமல் இருந்திருக்கலாம் என்றும், பாக்., ஊடகங்கள் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பாமல் இருந்ததால், அதிகம் தேடப்பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X