ஊளையிடும் ஸ்டாலின், கமல்: சுப்பிரமணிய சுவாமி பதிலடி

Updated : செப் 16, 2019 | Added : செப் 16, 2019 | கருத்துகள் (136)
Advertisement

புதுடில்லி: ஹிந்தி திணிப்பு என கமல், ஸ்டாலின் ஊளையிட்டு வருகின்றனர் என பாஜ., மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி விமர்சத்துள்ளார்.






ஹிந்தி தினமான செப்., 14ல் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனது டுவிட்டர் பதிவில், இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி இருக்க வேண்டியது அவசியம். தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஹிந்தி தான என்று, கருத்து பதிவிட்டிருந்தார்.





அமித்ஷாவின் இந்த கருத்து பலதரப்பில் விவாதமாக மாறியுள்ளது. தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மைய தலைவர் கமல் உள்ளிட்டோர் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இது தொடர்பாக கமல் வெளியிட்டுள்ள வீடியோவில், 1950ல் இந்தியா குடியரசான போது அரசு கொடுத்த சத்தியத்தை திடீரென்று எந்த ஷாவோ, சுல்தானோ, சாம்ராடோ மாற்றிவிட முயற்சிக்கக் கூடாது, என பேசிய வீடியோவை தனது டுவிட்டரில் வெளியிட்டார். இது பாஜ., அரசை மறைமுகமாக விமர்சித்ததாக எதிர்ப்பு குரல் ஒலித்தது.



இந்த விமர்சனங்களுக்கு பாஜ., மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறிய கருத்து: கமல் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஹிந்தி திணிப்பு என ஊளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஹிந்தி கற்பிக்க கூடாது என்று அவர்கள் திணிப்பதை என்னவென்று சொல்வது? முதலில் ஹிந்தியை மூன்றாவது மொழியாக தேர்வு செய்து கொள்ளும் வகையில் கொடுக்கலாம். எதைத் தேர்வு செய்து கொள்வது என்பது மாணவர்களின் முடிவாக இருக்கட்டும். இவ்வாறு சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (136)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
23-செப்-201904:57:40 IST Report Abuse
B.s. Pillai Mr.Sri is correct. Till 1961, there was three language formula and 3rd language marks were not included in the total marks in 10th standard. So Hindi was an optional subject and those who were eager to learn more languages were studying Hindi also seriously. I learnt Hindi and passed Dhakshin Bharat Hindi Pracahar Sabha test. When Government made passing Hindi was compulsory suddenly in 10 th standard and the marks obtained in Hindi will be included in the total marks, students who did not study Hindi, which was majority, were unable to cope up the high standard of Hindi in 10 th all on a sudden, instead of building up alowly the standard of Hindi lessons. All students in my 10th, except me, were affected. DMK took advantage of this situation and agitated. then the Hindi marks were excluded from total marks. If you see the mark sheet, the marks obtained in 10th standard will be shown away in a seperate column from the marks obtained in other subjects. In 1965, Lal Bhadhur Shastri d hindi as compulsory subject. Then Hindi agitation took place and there was unpleasant shootings by Army turned Tamilnadu totally against the Congress and since 1967 onwards, Dravidan parties are ruling Tamil Nadu and Congress is relgated to single digit seats. no noe likes imposition. So it should be left to the choice of the student community to the languages they want to study. Any language has its history and ultureare mingled up with it. So learning additional language is not going to hamper the progress and it will cultivate the mind better.
Rate this:
Share this comment
Cancel
sri - mumbai,இந்தியா
18-செப்-201916:39:58 IST Report Abuse
sri 1967 வரை தமிழ்நாட்டில் மும்மொழி கல்வி திட்டம் செயல் பட்டது. அவரவர் விருப்புக்கிணங்க தமிழோ சமஸ்க்ரிதமோ மூன்றாம் மொழியாக படித்தார்கள். மூன்றாம் மொழி மதிப்பெண்கள் கணக்கில் சேராதிருந்தது. மூன்றாம் மொழி படிக்க விருப்பமிருந்தால் படிக்க வாய்ப்பு இருந்தது. திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்து , சுப்ரமணியன் சுவாமி சொல்வது போல் படிக்க வாய்ப்பு இல்லாமல் செய்து விட்டார்கள். இதைவிட பெரிய அக்கிரமம் எதுவும் கிடையாது. இந்த விஷயத்தில் , அரசியலில் குதித்த கூத்தாடிகளை பெரிய அறிவு ஜீவிகள் போல் தமிழ் நாட்டில் எதை கொண்டு வரலாம் எதை கொண்டு வரக்கூடாது என்று கூறி குட்டையை குழப்பி விடுகிறார்கள். ஷாவை குறை கூறும் இவர்கள் , மக்கள் கருத்தை எப்படி கண்டு பிடித்தார்கள். படிப்பறிவில்லாத இவர்கள் மற்றவர்கள் எதை படிக்கலாம் எதை படிக்க கூடாது என்று சொல்வதை தமிழகம் கேட்பது அதன் தலைவிதி.
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
18-செப்-201916:06:36 IST Report Abuse
ganapati sb தமிழ் எனது தாய் மொழி ஹிந்தி எனது தேசிய மொழி சம்ஸ்க்ருதம் எனது மறை மொழி நான் கற்கும் மொழி எனது உரிமை நான் மும்மொழி கற்பதை எதிர்க்க மூன்று பெண்களை கட்டிய கட்டுமரம் கமலுக்கும் தகுதி இல்லை
Rate this:
Share this comment
Sathya Dhara - chennai,இந்தியா
23-செப்-201916:48:15 IST Report Abuse
Sathya Dhara சரியான பாதரக்ஷை பூஜை......நன்றி....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X