ஜனாதிபதி விமானத்தில் கோளாறு: விசாரணைக்கு உத்தரவு| Air India orders inquiry after President Kovind stuck for 3 hours at Zurich | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஜனாதிபதி விமானத்தில் கோளாறு: விசாரணைக்கு உத்தரவு

Updated : செப் 16, 2019 | Added : செப் 16, 2019 | கருத்துகள் (5)
Share
புதுடில்லி: அரசு முறைப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 9-ம் தேதி ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, சுலோவேனியா ஆகிய நாடுகளுக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.இந்நிலையில் கடந்த ஞாயிறன்று சுவிட்சர்லாந்து சென்றிருந்த ஜனாதிபதி தனது பயணத்தை முடித்து விட்டு சுலோவேனியா செல்ல திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஜூரிச்
ஜனாதிபதி, விமானம், கோளாறு,

புதுடில்லி: அரசு முறைப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 9-ம் தேதி ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, சுலோவேனியா ஆகிய நாடுகளுக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில் கடந்த ஞாயிறன்று சுவிட்சர்லாந்து சென்றிருந்த ஜனாதிபதி தனது பயணத்தை முடித்து விட்டு சுலோவேனியா செல்ல திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஜூரிச் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பி சென்றார். இதனால் ஜனாதிபதி பயண திட்டத்தில் 3 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. பின்னர் லண்டனிலிருந்து போயிங் 747 ரக விமானம் வரவழைக்கப்பட்டு சுலேவேனியா சென்றார்.


latest tamil newsஜனாதிபதி சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதால் இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X