நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா

Updated : செப் 17, 2019 | Added : செப் 16, 2019 | கருத்துகள் (19)
Advertisement
செப்.18-ல் பிரதமர் மோடி, சந்திக்கிறார், மம்தா

கோல்கட்டா: நாளை தேதி பிரதமர் மோடியை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேச உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மத்தியில் ஆளும் பா.ஜ. அரசுக்கெதிரான நிலைப்பாட்டை கையில் எடுத்து தனது மாநிலத்தில் பா.ஜ. ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதை அரசியல் ரீதியாக எதிர்த்து வருகிறார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. மேலும் சாரதா சிட்பண்ட் மோசடி விவகாரத்தில் கோல்கட்டா போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமாருக்கு ஆதரவாக, மத்திய அரசுக்கெதிராக போராட்டமும் நடத்தினார்.





இந்த சூழ்நிலையில் நாளை பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி சந்திக்க திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக மேற்கு வங்க தலைமை செயலக வட்டாரங்கள் கூறியது, இன்று மம்தா பானர்ஜி டில்லி சென்று செப்.18-ம் தேதி ( நாளை) பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது நிர்வாக சீர்திருத்தம் சம்பந்தமாக இருவரும் விவாதிக்க உள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் மேற்கு வங்க மாநிலம் விஸ்வபாரதி பல்கலை. பட்டமளிப்பு விழாவில் மோடி- மம்தா சந்திப்பு ஏற்பட்டது. அதன்பிறகு சந்திப்பு ஏற்படவில்லை. இந்நிலையில் சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் கோல்கட்டா மாஜி போலீஸ் கமிஷனர் ராஜிவ்குமார் சி.பி.ஐ.யால் தேடப்பட்டு வரும் நிலையில் மம்தா பானர்ஜி, பிரதமரை சந்திக்க உள்ளது அரசியல் முக்கியத்துவமாக கருதப்படுகிறது.


Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-செப்-201912:07:59 IST Report Abuse
நக்கல் இன்னும் ஏன் வைகோ மம்தாவை நேரில் சென்று பார்க்கவில்லை.....
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
17-செப்-201910:07:08 IST Report Abuse
narayanan iyer இருவரும் பரஸ்பரம் மாநிலத்தின் நலன் கருதி மனம் விட்டுப்பேசுங்கள் ஈகோ வேண்டாம்
Rate this:
Share this comment
Cancel
KSK - Coimbatore,இந்தியா
17-செப்-201909:59:23 IST Report Abuse
KSK சிங்கத்தின் குகைக்கு ஊழலில் ஊறி திளைத்த மமதை பிடித்த குள்ளநரி ஒன்று ஊளையிட்டு ஓலமிட வருகிறது, அவ்வளவு தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X