அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரிவினையை தூண்டுகிறார்: நமச்சிவாயம் எச்சரிக்கை

Added : செப் 16, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement

புதுச்சேரி: ஹிந்தி சிறந்த மொழி என கூறி, மக்களிடம் பிரிவினையை துாண்டுவதை, உள்துறை அமைச்சர் அமித்ஷா நிறுத்திக்கொள்ள வேண்டும் என, புதுச்சேரி மாநில காங்., தலைவர் நமச்சிவாயம் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:ஜாதி, இனம், மொழி, மதம் கடந்து சகோதர மனப்பான்மையுடன் ஒற்றுமையாய் வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்திய மக்களிடம் பிரிவினையை துாண்டும் நோக்கத்துடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஹிந்தி மொழிதான் சிறந்தது என்று கூறியிருப்பது, தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சியாகும். இது, கண்டிக்கத்தக்கது, பிற மொழி பேசும் மக்களின் மொழி பற்றை குறைவாக நினைக்கக் கூடாது. உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடத்தும் பா.ஜ., கட்சியின் சுயரூபம் அமித்ஷா மூலம் தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. நாட்டில் பலமொழி பேசும் மக்களின் தாய் மொழி பற்றினை கொச்சைப்படுத்தும் செயலை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒரு மொழிதான் சிறந்த மொழி என, ஹிந்தி பேசும் மக்களை மட்டும் புகழ்ந்து பேசுவது அரசியல் சுயலாபத்திற்குதான் என்று நாட்டு மக்கள் நன்குஅறிவார்கள். மொழி உணர்வை துாண்டி நாட்டு மக்களை ஏமாற்றும் ஏதேச்சதிகார எண்ணத்தை அமித்ஷா மாற்றிக் கொள்ள வேண்டும். உயரிய உள்துறை அமைச்சராகபொறுப்பு வகிக்கும் அவர் தனது பதவிக்கு பெருமை சேர்க்க கற்றுக் கொள்ள வேண்டும். தேச ஒற்றுமையை என்றும் காத்து சோனியா, ராகுல் ஆகியோர் காட்டும் தூய பாதையில் பயணித்து மதவாத, மொழி வாத, பா.ஜ., கட்சிக்கு பாடம் புகட்டுவோம்.இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
17-செப்-201916:29:11 IST Report Abuse
Endrum Indian நமச்சிவாயம் அப்போ பெரியார் வழி என்று சொல்லுங்கள்??தலித் ........தாழ்த்தப்பட்ட மக்கள் என்று சொல்லி பணம் சம்பாதித்தித்த மாதிரி???
Rate this:
Cancel
oce - kadappa,இந்தியா
17-செப்-201912:38:37 IST Report Abuse
oce மொழி வழி பிரிந்து இன வழி கூடி என்று அன்று அண்ணா சொன்னார். மொழி வழி பிரிந்திருப்பது பிரிவினை அல்ல. அது இன வழியை ஒன்றாக்கி இணைக்கிறது. இந்தி கற்பதில் தவறில்லை. மற்ற மொழிகள் போன்றது தான் இந்தியும். மற்ற மாநில மொழிகளை தமிழுடன் கற்க வேண்டு மென்று சொன்னால் அதை எதிர்ப்பீர்களா. மொழியை வைத்து அரசியல் செய்வது இன்று செல்லாக் காசாகி விட்டது.
Rate this:
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-செப்-201907:51:52 IST Report Abuse
Sriram V Similar statement was made by congies ex home minister chiddu also, why all you people kept quiet. You don't want tamilians to go and work in other parts of the country but asking your children's to learn to become union minister. Dravidian dirty politics alongwith corrupt congies
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X