பொது செய்தி

இந்தியா

'முதல் காலாண்டு முடிவு முற்றிலும் எதிர்பாராதது'

Updated : செப் 18, 2019 | Added : செப் 16, 2019 | கருத்துகள் (20)
Advertisement
'முதல் காலாண்டு முடிவு எதிர்பாராதது'

புதுடில்லி:'முதல் காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 5 சதவீதமாக இருந்தது, முற்றிலும் எதிர்பாராதது' என, ரிசர்வ் வங்கியின் கவர்னர், சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:
முதல் காலாண்டு முடிவு, முற்றிலும் எதிர்பாராதது. கடந்த சில மாதங்களாக மந்த நிலை காணப்படுவதால், பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில், ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை குறைத்து வருகிறது.தற்போதைய பொருளாதார நிலையை சரிசெய்வது என்பது, தொடர்ச்சியான ஒன்றாகும். கட்டுமான தொழிலுக்கு சலுகை, ஏற்றுமதி ஊக்கத்தொகை, வங்கிகள் ஒருங்கிணைப்பு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் வாகன துறைக்கு ஊக்கச் சலுகை அறிவிப்புகள் என, சில நடவடிக்கைகளை அரசு அறிவித்துள்ளது.


உலகளாவிய மந்த நிலை


அடுத்து, விவசாயத்தை சந்தைப்படுத்துதல் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பாக, அரசாங்கத்திடமிருந்து சில நடவடிக்கைகளை எதிர்பார்க்கிறேன்.அனைத்து முன்னேறிய நாடுகளின் பொருளாதாரம், இரண்டாவது காலாண்டில், முதல் காலாண்டை விட குறைவாக உள்ளது. இதற்காக, உலக மந்த நிலையை வைத்து, நமது நிலையை நியாயப்படுத்த முயற்சிக்கவில்லை. இருப்பினும், உலகளாவிய மந்த நிலை, வளர்ச்சியை பாதிக்கிறது.இரண்டாவது காலாண்டில், பல்வேறு காரணிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ரிசர்வ் வங்கி பகுப்பாய்வு செய்து, மதிப்பீடு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ
17-செப்-201917:19:53 IST Report Abuse
tamilvanan பொருளாதார மந்த நிலை அமெரிக்கா சீனா போன்ற எல்லா நாடுகளிலும் இருக்கிறது. இந்த நிலையில் இருந்து மீள எல்லா நாடுகளுமே முயற்சி செய்து வருகின்றன. இந்த நிலைக்கு காரணம் என்ன என்று தீர்மானமாக சொல்ல முடியவில்லை. பொருளாதார நிபுணர்கள் இந்த நிலை பல ஆண்டுகள் வளர்ச்சிக்கு பின் தோன்றும் மந்த நிலை என்றே கூறுகின்றனர். இதற்கு இந்தியா விதி விலக்கு அல்ல. யாரையும் குற்றம் சாற்ற முடியாது. பொறுமை தேவை.
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
18-செப்-201910:21:01 IST Report Abuse
Anandanகாங்கிரஸ் ஆண்டால் குற்றம் சொல்லணும் பிஜேபி ஆண்டால் இப்படி பக்குவமா பேசணும் இல்லைனா தேசபக்தி இல்லைனு சொல்லணும்....
Rate this:
Share this comment
Cancel
mohan - chennai,இந்தியா
17-செப்-201916:07:29 IST Report Abuse
mohan பெரிய உற்பத்தி நிறுவனங்களின் ரன்னிங் கேப்பிடல் பணம், gst மூலமாக அரசாங்கத்திற்கு சென்று விட்டது... அரசாங்கம் எப்பொழுது திருப்பி தந்து எப்பொழுது நிறுவனங்களை நடத்துவது...இதை ஏன் உணர மறுக்கிறீர்கள்... இந்த முறையை மாற்றுங்கள். தொழில் துறை நன்றாக இருக்கும்...
Rate this:
Share this comment
Cancel
mohan - chennai,இந்தியா
17-செப்-201916:05:25 IST Report Abuse
mohan மூக்கை சுற்றி வளைத்து தொடும் gst முறையை மாற்றி அமையுங்கள்... நாட்டிற்கு, என்ன வரி இப்பொழுது செல்கிறதோ, அதை நாங்கள் கட்டி கொண்டு தான் இருக்கின்றோம். அனால், மிக பெரிய நிறுவனங்கள், அழுகின்றன... அந்த அழுகை உங்களுக்கு கேட்கிறதா என்று தெரிய வில்லை... ஒன்று அல்லது இரண்டு சதவிகித்தில் இருந்து தொழிலுக்கு தகுந்தாற்போல் நீங்கள் வரி விகிதம் அமையுங்கள்... வரி கட்டிவிட்டு, அதை திரும்ப பெறுவது என்பது, தேவை இல்லாதது. ஒன்று செய்யலாம், பட்டி தொட்டிகளில் உள்ள , மளிகை கடைகள் கூட வரி கட்ட தயாராக இருக்கும்.. அனால், அதற்கு ஒரு கணக்கு பிள்ளை வைத்து, பராமரிப்பது தான் சிரமம்... எல்லாருக்கும், கணனி மைய பில் போட சொல்லலாம். அதை தனி ஒரு சர்வர் வைத்து, அன்றாட வரி வருமானங்களை கண்காணிக்கலாம் . நீங்கள் திரும்ப தரும் வரி விகித பணம் எவ்வளவோ, அதை தவிர்த்து, நேரடி வரி சொல்லுங்கள், கட்டி விட்டு, எங்கள் வேலையை நாங்கள் பார்த்து கொண்டு இருக்கிறோம். தொழில் துறை நன்றாக இருக்கும். ஆரம்ப தொழில்கள் நன்றாக இருந்தாலே தான், உச்ச கட்ட தொழில்கள் வரை எல்லாம், சீராக இருக்கும்... ஏனென்றால், எங்களுக்கு பணம் தரவேண்டிய நிறுவனங்கள், gst பணம் கோடி கணக்கில் வரவேண்டி உள்ளது, வரட்டும் தருகிறோம் என்கின்றார்கள். நாங்கள் எங்களது சிறு நிறுவனங்களுக்கு சம்பளம் கொடுக்க முடிவதில்லை... நிறுவனங்களை மூடும் சூழ் நிலைக்கு தள்ள பட்டுள்ளோம்... ஏற்கனவே பல பெரிய நிறுவனங்கள், மூன்று மாதங்களாக பெரிய பூட்டு தொங்கி கொண்டு உள்ளது...இன்னும் இதை அதிக படுத்தும் சூழ்நிலைக்கு செல்ல வேண்டாம்...நன்றி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X