அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஹிந்தி திணிப்பை கண்டித்து 20ல், தி.மு.க., ஆர்ப்பாட்டம்

Updated : செப் 17, 2019 | Added : செப் 16, 2019 | கருத்துகள் (69)
Advertisement
ஹிந்தி திணிப்பை கண்டித்து  20ல், தி.மு.க., ஆர்ப்பாட்டம்

சென்னை: 'மத்திய உள்துறை அமைச்சர், அமித்ஷாவின் ஹிந்தி திணிப்பு கருத்தை கண்டித்து,வரும், 20ம் தேதி, மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை, அறிவாலயத்தில், தி.மு.க., தலைவர், ஸ்டாலின் தலைமையில், உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம், நேற்று நடந்தது. கூட்டத்தில், முதன்மை செயலர், டி.ஆர்.பாலு, மகளிர் அணி செயலர், கனிமொழி உட்பட, 21 பேர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:நாட்டின் பொருளாதார சரிவு, வேலை வாய்ப்புகள் இழப்பு, காஷ்மீர் விவகாரம் போன்ற முக்கியமான பிரச்னைகளில் இருந்து, மக்களை திசை திருப்பிடும் திட்டத்தை, மத்திய அரசு வகுத்துள்ளது. 'நாட்டின் அடையாளமாக, ஒரேயொரு மொழி இருக்க வேண்டும்; ஹிந்தி மொழி தான் அந்த அடையாளத்தை கொடுக்கும்' என, அமித்ஷா கூறியுள்ள, இந்த திட்டம் கண்டனத்திற்குரியது.
மத்திய அரசு, ஹிந்தி திணிப்பை உடனே கைவிட வேண்டும்; நாட்டை முன்னேற்றும், நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.ஹிந்தி ஆதிக்கத்தால் ஏற்படும் பாதிப்பை, முளையிலேயே கிள்ளி எறிந்திடும் வகையில், முதல்கட்டமாக, வரும், 20ம் தேதி, மாநிலம் முழுவதும், வருவாய் மாவட்டங்களில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அதில், கூறப்பட்டுளளது.

கூட்டம் முடிந்த பின், ஸ்டாலின் கூறுகையில், ''அமித்ஷாவின் ஹிந்தி திணிப்பு கருத்தை கண்டித்து, முதல்கட்டமாக, ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்; அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, ஒருமித்த கருத்துள்ள கட்சிகளிடம் பேச்சு நடத்தி, முடிவை அறிவிப்போம்,'' என்றார்.


அமெரிக்க நிறுவனத்திடம் லஞ்சம்தி.மு.க., தலைவர், ஸ்டாலினின் டுவிட்டர் பதிவு:அமெரிக்காவை சேர்ந்த, மென்பொருள் நிறுவனமான, சி.டி.எஸ்.,க்கு, தமிழகத்திலும் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனம், சென்னையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான அனுமதி பெறவும், மின் இணைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி பெறவும், தமிழக ஆட்சியாளர்களுக்கு, 26 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தாக செய்தி 29வெளியானது. இந்த நிறுவனம், சென்னையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான அனுமதிக்காக, அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு, லஞ்சம் தந்த வழக்கில், குற்றத்தை ஏற்று, அமெரிக்காவில் அபராதம் செலுத்தி உள்ளது. தமிழகத்தின் லஞ்ச லாவண்யம், அமெரிக்கா வரை சந்தி சிரித்திருக்கிறது. லஞ்சம் கொடுத்தவர்களுக்கு, அமெரிக்கா தண்டனை தந்திருக்கிறது. லஞ்சம் வாங்கிய தமிழக அதிகாரிகள், ஆட்சியாளர்கள் மீது, முதல் தகவல் அறிக்கை கூட போடாமல், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பாதுகாக்கிறது. மத்திய அரசும், சி.பி.ஐ.,யும், கண்டும் காணாமல், லஞ்சம் 29பெறுவதை ஊக்கப்29படுத்துகின்றனவா என, 29தெரியவில்லை.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.Advertisement


வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.K - Hamburg,ஜெர்மனி
18-செப்-201902:00:51 IST Report Abuse
N.K இவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க இவரின் தந்தையார் கூறிய காரணம் "அவருக்கு ஹிந்தி தெரியும் என்பதால் " அரசியலிலும், ஆட்சி பதவிகளிலும் இவர்களின் குடும்ப திணிப்பை எதிர்த்து யாரும் போராடவில்லை. இப்போதுகூட உதயநிதி திணிக்கப்பட்டிருக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
kskmet - bangalore,இந்தியா
17-செப்-201921:45:18 IST Report Abuse
kskmet 1965 அல்ல இப்ப்போது. அன்று தி மு க செய்த அடாவடியால் இரண்டு தலைமுறைகள் சீரழிந்து விட்டன. மற்ற மொழிகள் பரவ தொடங்கினால் பல நல்ல விஷயங்கள் எல்லோருக்கும் தெரிய வருமே. நல்லது கெட்டது தெரிந்துகொள்ளும் இழி நிலைக்கு தமிழன் தள்ளப்பட்டால் நம்ம பொழப்பு நாறிப்போய்விடுமே. நமக்கு தெரியாத மொழியில் பேசி மற்றவர்கள் முன்னேறக்கூடடாது என்று அப்பாவாவது கவி இலக்கியம் என்று பேசி பேசியே காலத்தை தள்ளி விட்டார். துண்டு சீட்டில் துதி பாடும் நாம் என்னத்தை செய்யறது யார் கிட்ட சொல்வது...சொக்கா...எல்லா பிரச்னையும் என் காலத்திலயா வரணும். நம்ம கூட இருப்பவர்களே தேவையில்லாமல் ஐ டி, அமலாக்க துறை நினைத்து ஆடி போய் இருக்கானுங்க. இந்த நிலைமையில் ஈஸ்வரா ஒரு கண்துடைப்புடன் எந்த பிரச்னையும் இல்லாமல் இந்த எதிர்ப்பு ஆரம்பித்து முடிந்தால் உனக்கு மாறு வேடத்தில் வந்து பிரார்த்தனை செய்கின்றேன். என்னை காப்பாற்றப்பா.
Rate this:
Share this comment
Cancel
dinesh - pune,இந்தியா
17-செப்-201919:46:35 IST Report Abuse
dinesh Dmk ல இருந்து அடுத்து எவனோ திஹாருக்கு போகப்போறான். அதுக்குத்தான் இப்பவே இந்த அரசியல் ஸ்டண்ட்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X