பொது செய்தி

இந்தியா

கச்சா எண்ணெய் விலை உயர்வு: எரிபொருள் விலை அதிகரிக்கலாம்

Updated : செப் 16, 2019 | Added : செப் 16, 2019 | கருத்துகள் (16)
Share
Advertisement
கச்சா எண்ணெய், விலை, உயர்வு, எரிபொருள், விலை, அதிகரிக்கலாம்

புதுடில்லி: இந்தியாவுக்கு, கச்சா எண்ணெய் வழங்குவதில், எந்த தட்டுப்பாடும் வராது என்று, சவுதி அரேபியா தெரிவித்துள்ளதாக, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
சவுதி அரேபியாவின், மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான, 'அராம்கோ' நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையத்தில், ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, எண்ணெய் விலை, கடந்த நான்கு மாதங்களில் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.


latest tamil news



இந்நிலையில், உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதி நாடான இந்தியாவுக்கு, கச்சா எண்ணெய் வழங்குவதில் எந்த தட்டுப்பாடும் ஏற்படாது என, சவுதி அரேபியாதெரிவித்துள்ளது. சவுதி அரேபியா, உலகில் அதிகளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில், இரண்டாவது இடத்தில் உள்ளது.விமான தாக்குதலை அடுத்து, சவுதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி சரிந்தது.
நாளொன்றுக்கு, 57 லட்சம் பேரல் அளவுக்கு உற்பத்தி குறைந்துவிட்டது. இது, உலக அளவிலான சப்ளையில், 5 சதவீதமாகும்.நேற்று பங்குச் சந்தைகளில், நாட்டின் பெட்ரோலிய நிறுவன பங்குகளின் விலை, 7 சதவீதம் வரை சரிவை கண்டன.இந்நிலையில், எச்.பி.சி.எல்., நிறுவனத்தின் தலைவர், எம்.கே. சுரானா, ''கச்சா எண்ணெய் விலை, 10 சதவீதம் அதிகரித்ததால், எரிபொருள் விற்பனை நிலையங்களில், விற்பனை விலை அதிகரிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-செப்-201917:27:19 IST Report Abuse
பச்சையப்பன் எண்ணெய் விலை அதிகரிக்கலாம்!!!?. ok ok திருவோடு விலை குறையுமா??? அது நிறையுமா?????.
Rate this:
Cancel
17-செப்-201913:14:37 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் ஒருபக்கம் நிலத்தில் இருந்து எண்ணெய் எடுக்கக்கூடாது என்று கூவுவது, இன்னொருபுறம் குறைந்த விலைக்கு பெட்ரோல் வேண்டும் என்று கூவுவது ஒரே கும்பல் தான், பகுத்தறிவு கும்பல் , அறிவை மட்டும் பயன்படுத்துவதில்லை.
Rate this:
Cancel
COW URINE SANGI - tamilnadu,இந்தியா
17-செப்-201911:56:27 IST Report Abuse
COW  URINE  SANGI கதிரழகன் sslc அவர் படித்ததற்கு தகுந்த மூளை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X