பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வரின் வெளிநாட்டு பயணத்தில் நடந்தது என்ன?: ரூ.90,00,00,00,000!

Updated : செப் 18, 2019 | Added : செப் 16, 2019 | கருத்துகள் (40)
Share
Advertisement
முதல்வரின் வெளிநாட்டு பயணத்தில் நடந்தது என்ன?:  ரூ.90,00,00,00,000!

திருப்பூர்: 'முதல்வர் பழனிசாமியின், அமெரிக்கா மற்றும் துபாய் சுற்றுப்பயணம் மூலம், வரும் 2020ம் ஆண்டு இறுதிக்குள், தமிழகத்துக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வருவது உறுதி' என்று, முதல்வருடன் சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற, இந்தோ - அமெரிக்க தொழில் வர்த்தக சபை தலைவர் சக்திவேல் கூறினார்.

தமிழகத்துக்கு, அன்னிய முதலீடுகளை ஈர்க்க, முதல்வர் பழனிசாமி, வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்தோ - அமெரிக்க தொழில் வர்த்தக சபை தலைவரும், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக துணைத்தலைவருமான சக்திவேல் பங்கேற்று, அமெரிக்கா மற்றும் துபாயில் முதலீட்டாளர் மாநாட்டுக்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
இதுகுறித்து சக்திவேல்,தினமலர் இதழுக்கு அளித்த பேட்டி:முதலீட்டாளர் மாநாடு கடந்த 3ம் தேதி, நியூயார்க்கில் நடந்தது; 2,780 கோடி ரூபாய் முதலீட்டுக்கான 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம், 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தினர், நாப்தா உற்பத்தியுடன் கூடிய ஒரு தொழிற்சாலையை தமிழகத்தில் அமைக்க விரும்புவதாக தெரிவித்தனர்; இது ஒரு மிகப்பெரிய முதலீடாக அமையும்.கடந்த 4ம் தேதி, அமெரிக்காவின், சான்ஹீசே நகரில் நடந்த மாநாட்டில், 2,300 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான, 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின; இதில், ஏழாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். கடந்த 5ம் தேதி, 'டெஸ்லா' கார் உற்பத்தி நிறுவனத்துக்கு சென்றோம். சுற்றுச்சூழலை பாதிக்காத, மின்சாரத்தில் இயங்கும் கார் உற்பத்தி தொழில்நுட்பங்களை பார்வையிட்டோம். இந்நிறுவனத்தினரும் தமிழகத்தில் முதலீடு செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.

அமேசானின் இருப்பு மையத்தை பார்வையிட்டோம். 'ரோபோ' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தினமும் இரண்டு லட்சம் பார்சல்களை நுகர்வோருக்கு அனுப்புகின்றனர்.அமேசான் போன்ற நிறுவனங்கள், இத்தகைய ஒரு இருப்பு மையத்தை தமிழகத்திலும் துவக்கினால் சிறப்பாக இருக்கும். கடந்த 6ம் தேதி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், அனேஹெம் நகராட்சியில், கழிவுநீரை சுத்திகரிக்கும் தொழில்நுட்பங்களை பார்வையிட்ட முதல்வர், தமிழக மாநகராட்சி, நகராட்சிகளில் கூட இந்த திட்டத்தை செயல்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்று கூறினார்.
அடுத்ததாக, 9ம் தேதி, துபாயில் முதலீட்டாளர் மாநாடு நடந்தது. இதில், 3,800 கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம், 11 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவர். இப்பயணம் மூலம், மொத்தம் 9 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான, 41 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன; 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.முதலீடுகளை முழுமையாக கொண்டுவருவதற்காக முதல்வர் தலைமையில், தொடர்ந்து கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. 41 ஒப்பந்தம் மீதான முதலீடுகளும் தமிழகத்தை வந்தடைவது உறுதி. வரும் நவம்பர் முதல், முதலீட்டாளர்கள் தமிழகம் நோக்கி வரத்துவங்குவர். வரும், 2020ம் ஆண்டு இறுதிக்குள் திட்டமிட்டபடி அனைத்து முதலீடுகளும்வந்தடைந்து விடும்.முதல்வர் தலைமையில், முதலீடுகளை கொண்டுவர தனி கமிட்டி அமைக்கப்பட வேண்டும். அதில், அனைத்து துறை செயலர்கள் இடம்பெற வேண்டும். நானும் இணைந்து பணிபுரிய தயாராக உள்ளேன். இதன்மூலம் மிக எளிதாகவும், விரைவாகவும் முதலீடுகளை பெற முடியும்.


எங்கெங்கு அமையும்பெரும்பாலான முதலீட்டாளர்கள், ஏற்றுமதிக்கு ஏதுவாக சென்னை சுற்றுப்பகுதிகளில் நிறுவனங்கள் அமைக்க விரும்புவதாக தெரிவித்தனர். முதலீட்டாளர்களிடம் சென்னை, துாத்துக்குடி, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள வசதிகள், தமிழகத்தின் தனித்துவம் குறித்து அரசு செயலர்கள் விளக்கம் அளித்தனர். தமிழகத்தில் உள்ள வசதிகளை அறிந்து, முதலீட்டாளர்கள் வியந்தனர்.


அரசு சலுகைகள்தமிழகத்தில் அமைக்கப்படும் அன்னிய நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம், தண்ணீர், சாலை உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துதரப்படும் என, முதலீட்டாளர்களிடம் முதல்வர் தெரிவித்தார். பல்வேறு துறை சார்ந்த அனுமதிகள், விரைந்து வழங்கப்பட வேண்டும் என, முதலீட்டாளர்கள் தங்கள் எதிர்பார்ப்பை தெரிவித்தனர். ஒற்றைச்சாளர முறை நடைமுறையில் உள்ளது. அனைத்து துறை சார்ந்த அனுமதிகளும் உடனடியாக பெறமுடியும் என, அவர்களுக்கு பதில் அளித்தோம்.


தமிழகம் மேம்படும்வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையால், தமிழக பொருளாதாரம் மேம்படும். வேலைவாய்ப்பு பெருகும். அன்னிய நிறுவனத்தினர் தொழில்துவங்கும்போது, தொழில்நுட்பங்களையும் கொண்டுவருகின்றனர். அதனால், தமிழகத்தில் அதிநவீன தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும்.தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், எரிசக்தி, மின் உற்பத்தி துறைகள் தமிழகத்தில் சிறப்பான வளர்ச்சிபெறும். பெரு நிறுவனங்கள் வந்தாலும் இதைச் சார்ந்து பொருட்கள், உபரி பாகங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்ய ஏராளமான சிறு, குறு நிறுவனங்களும் தேவைப்படும் என்பதால், தொழில் வளர்ச்சி பெருகும்.


பயணங்கள் தொடரும்பயணம் ஒரு துவக்கம் தான். நல்ல வரவேற்பு கிடைப்பதால், எந்தெந்த நாடுகளில் தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்பு உள்ளது என கண்டறிந்து, அந்த நாடுகளில் முதலீட்டாளர் மாநாடுகள் நடத்த வேண்டும் என்பது முதல்வரின் விருப்பம்.தொழில் வளத்தில், மகாராஷ்டிரா முதன்மை மாநிலமாக உள்ளது; தமிழகத்தை, நாட்டின் தொழில் வளர்ச்சி பெற்ற முதன்மை மாநிலமாக மாற்றிக்காட்ட வேண்டும் என்கிற குறிக்கோளுடன்தான், முதல்வர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.இவ்வாறு, சக்திவேல் கூறினார்.


முதலீடு ஈர்க்க வெளிநாடு சென்ற தமிழகத்தின் முதல் முதல்வர்''நியூயார்க் மாநாடு முடிந்து, விமானத்தில் சான்ஹீசே நகரம் நோக்கி சென்றோம். அது, ஆறு மணி நேர பயணம். அந்த பயண நேரம் முழுமையும், தமிழக முதல்வர் என்னிடம் பேசிக்கொண்டே வந்தார். எளிமையான முதல்வர். அவரது பேச்சில், தமிழக நலனுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்கிற உத்வேகத்தை உணர முடிந்தது. குறிப்பாக, விவசாய வளர்ச்சி, தமிழகத்தில் தொழில் வளத்தை அதிகரிக்கவேண்டும் என தெரிவித்தார்.ஒவ்வொரு இடத்துக்குச் செல்லும்போதும் உற்சாகமாக காணப்பட்டார். முதலீட்டாளர்களின் கேள்விகளுக்கு, சில நேரங்களில் முதல்வர் தானே நேரடியாக பதில் அளித்தார்; அவரது அனைத்து துறை சார்ந்த திறனைப்பார்த்து அனைவரும் வியந்தனர். ஏழு நாட்கள் தமிழக முதல்வருடனேயே இருந்தேன். எப்போதும், தமிழகத்துக்கு, தமிழக மக்களுக்கு என்றுதான் பேசிக்கொண்டிருந்தார். முதலீட்டுக்காக வெளிநாடு சென்ற முதல் முதல்வர் பழனிசாமிதான்'' என்றார் சக்திவேல்.


குப்பையில் இருந்து மின்சாரம் திண்டுக்கல்லில் புதிய திட்டம்ஸ்ரீதர், வெங்கட் ஆகிய இரு தமிழர்கள் இணைந்து, அமெரிக்காவில் 'ப்ளூம் எனர்ஜி' என்ற பெயரில், மாசு இல்லாத மின் உற்பத்தி நிறுவனத்தை செயல்படுத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தை முதல்வர் உட்பட நாங்கள் எல்லோரும் சென்று பார்வையிட்டோம். தமிழகத்தில் இந்த மின் உற்பத்தி திட்டத்தை துவக்கவேண்டும் என, முதல்வர் அழைப்பு விடுத்தார். இவ்விருவரும் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நிறுவனம் அமைப்பதற்காக, ஏற்கனவே திண்டுக்கல்லில் ஆய்வு நடத்திச் சென்றுள்ளனர். திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணைந்து, திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர். இது, முதல்வரை மேலும் உற்சாகப்படுத்தியது. தேவையான உதவிகள் செய்வதாக உறுதி அளித்தார். இதன் மூலம், குப்பை அழிக்கப்படுவதோடு, மின்சாரமும் பெறமுடியும். இதை உறுதி செய்வதற்காக, வரும் நவம்பர் முதல்வாரத்தில், இருவரும் தமிழகம் வர உள்ளனர்.


வெளிநாடு வாழ் தமிழர்கள் ஆர்வம்நியூயார்க், சான்ஹீசே ஆகிய நகரங்களில் நடந்த 'யாதும் ஊரே' திட்ட நிகழ்ச்சிகளில், அமெரிக்கவாழ் தமிழக தொழில்முனைவோர், 350 பேர் பங்கேற்றனர். சான்ஹீசே நகரில், சிலிக்கான் வேலி என்கிற இடத்தில், தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர் தொழிலதிபர்களாக உள்ளனர். அவர்கள் எல்லோரும், தமிழகத்தில் நிச்சயம் முதலீடு செய்வோம். 'யாதும் ஊரே' ஒரு புதுமையான திட்டமாக உள்ளது.இது, எங்கள் மனதில் உத்வேகத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் நாங்கள் ஈர்த்த வருவாயை, தமிழகத்தில்முதலீடு செய்வதன்மூலம், பூர்வீகமான தமிழகத்துக்கு நாங்களும் சேவை செய்தோம் என்கிற திருப்தி ஏற்படும் என நெகிழ்ச்சியுடன்தெரிவித்தனர்.

வெளிநாடு வாழ் தமிழக மக்கள், தமிழகத்தில் முதலீடு செய்தால், முதலீட்டு தொகையில் 10 சதவீதத்தை அரசே வழங்கும் என, முதல்வர் அங்கு அறிவித்தார். இது, வெளிநாடு வாழ் தமிழகத்தை சேர்ந்தமுதலீட்டாளருக்கு மட்டுமான பிரத்யேக சலுகை.

Advertisement


வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan Duraisamy - Fremont,California,யூ.எஸ்.ஏ
19-செப்-201910:36:37 IST Report Abuse
Nagarajan Duraisamy செய்யறது ஊழல் அரசியல்...ஏன் ஆப்பிரிக்கா சென்று மக்களை எப்படி அரசியல் வாதிகள் ஏமாற்றுகிறார்கள் என்று பார்த்து இங்கேயும் செய்யுங்க. ஏற்கனவே, வாக்குக்கு துட்டு, சத்துணவு ஊழல் அங்கிருந்து தான் நம்ம ஊருக்கு இறக்குமதியாயிருக்கு. உங்க வியாபாரம் நல்லா போவும். பரட்டையும் சப்பாணியும் மயிலுக்கு(அரசாட்சி) சண்டை போடும் காட்சி தான் பாக்கி..அடுத்த தேர்தலில் அதுவும் நடக்க போகுது.
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
18-செப்-201911:07:16 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ தமிழகத்தில் உள்ள வசதிகளை அறிந்து, முதலீட்டாளர்கள் வியந்தனர். //// வேலை வெட்டி இல்லாத போராளீஸ் கூட இருக்காங்க -ன்ற உண்மையைச் சொல்லலியா ??
Rate this:
Cancel
venkata achacharri - india,இந்தியா
18-செப்-201908:37:17 IST Report Abuse
venkata achacharri driving licence corruption register office corruption taluka office corruption despite of all these things how industrialist this place every where state govt work can be done only with money any hidden agenda may be there
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X