அரசியல் செய்தி

தமிழ்நாடு

'எந்த ஷாவும் மாற்றக்கூடாது': சொல்கிறார் கமல்

Updated : செப் 17, 2019 | Added : செப் 16, 2019 | கருத்துகள் (28+ 251)
Advertisement
'எந்த ஷாவும் மாற்றக்கூடாது':

சென்னை: 'இந்தியா குடியரசான போது மக்களுக்கு அரசு செய்த சத்தியத்தை எந்த ஷாவும்,சுல்தானும் மாற்ற முயற்சிக்கக் கூடாது' எனமக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் கூறியுள்ளார்.

டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு: பல ராஜாக்கள் அவர்களின் ராஜ்ஜியத்தை விட்டுக் கொடுத்து உருவாக்கியது தான் இந்தியா. ஆனால் மொழியையும் கலாசாரத்தையும் விட்டுத்தர முடியாது என்பதில் உறுதியாக இருந்தனர். இந்தியா 1950ல் குடியரசான போது அரசு மக்களுக்கு செய்த சத்தியத்தை திடீரென்று எந்த ஷாவோ, சுல்தானோ, சாம்ராடோ மாற்ற முயற்சிக்கக் கூடாது.
ஜல்லிக்கட்டு போராட்டம் சிறிய அளவிலானது; அது ஒரு சிறிய வெற்றி. எங்கள் மொழிக்காக நாங்கள் போராட துவங்கினால் அது அதைவிட பன்மடங்கு பெரிதாக இருக்கும். அந்த ஆபத்து இந்தியாவிற்கோ தமிழகத்திற்கோ தேவையற்றது.வங்காளிகளை தவிர பெரும்பாலான இந்தியர்கள் நம் தேசிய கீதத்தை அவரவர் மொழிகளில் பாடுவதில்லை. இருந்தாலும் அதை சந்தோஷமாக பாடிக் கொண்டிருக்கிறோம்; பாடிக்கொண்டே இருப்போம். தேசிய கீதத்தை எழுதிய கவிஞர் எல்லா கலாசாரத்திற்கும் எல்லா மொழிகளுக்கும் தேவையான இடத்தையும் மதிப்பையும் கொடுத்திருந்தார்.

இந்தியா என்பது ஒரு அற்புத விருந்து; அதை கூடி உண்போம். திணிக்க நினைத்தால் குமட்டிவிடும்; தயவுசெய்து அதை செய்யாதீர்கள். வேற்றுமையில் எங்களால் ஒற்றுமையை காண முடியும்.இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (28+ 251)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankar M - Bangalore,இந்தியா
17-செப்-201917:19:05 IST Report Abuse
Sankar M By Somehow government made people to forget economics and make them to think about Hindi.. All political tricks... Shame.. HindiImpositionSlowdownEconomics
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
17-செப்-201914:30:18 IST Report Abuse
Cheran Perumal கொஞ்சம் ஓவரா தெரியுதே? ஸ்டாலின் இடமிருந்து எதிர்ப்பு அரசியலை பறிக்க நினைக்கிறாரா?
Rate this:
Share this comment
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
17-செப்-201914:34:14 IST Report Abuse
தாண்டவக்கோன்ஸ்டாலினுக்கு இவ்ளோ அழகா, நயமா பேச வருமா 🤔🤔🤔...
Rate this:
Share this comment
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-செப்-201912:56:51 IST Report Abuse
Janarthanan இவர் நேற்று வெளியிட வீடியோ நன்றாக கவீணீத்தீர் என்றால், அது ஏதோ ப்ரோமோ வீடியோ போல் இருந்தது , இயல்பாக இல்லை பூரா நடிப்பு போல் இருந்தது, ஆமாம் இந்த முறையை இந்த நடிப்பை வைத்து மக்களை தூண்டி கலவரத்தை உண்டு பண்ண வேண்டும் என்று யாரோ கொடுத்த அசைண்மெண்ட் நடித்து உள்ளார் உலக நாயகன் கமல் அவர்கள், புரிந்து கொள்ளுங்கள் மக்களே DON'T GET PROVOKED BY THESE KIND OF STUPID VIDEOS, அவர்க்கு பெய்மென்ட் போய்விட்டது , உங்களுக்கு ஒன்னும் கிடைக்காது ???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X