கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பேனர் கலாசாரத்திலிருந்து வெளியேறியது, தி.மு.க., சபாஷ்!

Updated : செப் 17, 2019 | Added : செப் 16, 2019 | கருத்துகள் (39+ 72)
Advertisement

சென்னை: தமிழகத்தில், அனைத்து கட்சிகளுக்கும் முன்னதாக, பேனர் கலாசாரத்திலிருந்து, தி.மு.க., வெளியேறியது. இனி, 'பேனர், பிளக்ஸ் போர்டு, கட் - அவுட்' வைப்பதில்லை என, உயர்நீதிமன்றத்தில், அக்கட்சி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தி.மு.க.,வின் இந்த செயல், அனைத்து தரப்பினரையும், 'சபாஷ்' போட வைத்துள்ளது.

சென்னை பள்ளிக்கரணை அருகே, சில தினங்களுக்கு முன், அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர், ஜெயகோபால் இல்ல திருமண விழாவிற்காக, சாலைகளில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த பேனர்களில் ஒன்று சரிந்து விழுந்ததில், அவ்வழியே, இருசக்கர வாகனத்தில் சென்ற, குரோம்பேட்டையை சேர்ந்த, தனியார் நிறுவன மென்பொறியாளர், சுபஸ்ரீ, 23, தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, பின்னால் தண்ணீர் லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியானார்.இந்த சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், எம்.சத்யநாராயணன், என்.சேஷசாயி அமர்வில், வழக்கறிஞர்கள் லக்ஷ்மிநாராயணன், கண்ணதாசன் ஆகியோர் முறையிட்டனர். அத்துடன், விதிமீறல் பேனர்கள் தொடர்பாக, டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கையும், நீதிபதிகள் விசாரித்தனர்.
அப்போது, 'பேனர்கள் வைக்கக் கூடாது என, கட்சி தலைவர்கள் அறிவித்தால் என்ன?' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின், 'தி.மு.க., - அ.தி.மு..க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், எந்த நிகழ்ச்சிகளுக்கும் பேனர்கள் வைக்கக் கூடாது என, தொண்டர்களுக்கு உத்தரவிட வேண்டும்; அதை, பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

அதை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க.,- சார்பில், பிரமாணப் பத்திரத்தை, அதன் அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி, நேற்று தாக்கல் செய்தார். அந்த பிரமாணப் பத்திரத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த, 2017 ஜனவரி, 29ல், தி.மு.க., செயல் தலைவராக, ஸ்டாலின் இருந்த போது, கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதினார். அதில், 'கட்சி அல்லது பிற நிகழ்ச்சிகளுக்கு, சட்டவிரோத பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், கட்- - அவுட்டுகள் போன்றவை வைக்கக்கூடாது' என, எச்சரித்திருந்தார்.
அடுத்து, 2018 ஜூன், 19ல், தி.மு.க., தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பில், 'ஆர்வமிகுதியால் சிலர் பேனர்கள் வைப்பது தொடர்கிறது; அதையும் தவிர்க்க வேண்டும்' என, அறிவுத்தப்பட்டது.
சுபஸ்ரீ மரணத்திற்கு பின், 'பொதுமக்களுக்கு இடையூறாக, பேனர்கள், கட் - -அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது; மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, 13ம் தேதி, தி.மு.க., தலைவர், ஸ்டாலின், அறிவிப்பு வாயிலாக எச்சரித்துள்ளார்.
கடந்த, 2017ல், கோவையில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவிற்கு வந்த முதல்வர், அமைச்சர்களை வரவேற்று, வளைவு வைக்கப்பட்டது. அந்த வளைவு விழுந்ததில், லாரியில் அடிபட்டு, பொறியாளர் ஒருவர் இறந்தார். அப்போது, விதிமீறல் பேனர்களை தடுக்கக்கோரி, தி.மு.க., - எம்.எல்.ஏ., கார்த்தி வழக்கு தொடர்ந்தார். அதில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை, தி.மு.க., கடைப்பிடித்து வருகிறது.
'பேனர்கள், கட்- - அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள்' ஆகியவற்றை கட்டுப்படுத்த, தி.மு.க., எடுக்கும் நடவடிக்கைகளை, நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்து வருவதற்காக, இந்த பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை மதித்து, தி.மு.க., செயல்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து கட்சிகளுக்கும் முன்னதாக, பேனர்கள், கட் - அவுட்கள் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, தி.மு.க., பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது, தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினரையும், 'சபாஷ்' போட வைத்துள்ளது. இதை மற்ற கட்சிகளும் பின்பற்றினால், போக்குவரத்து நெரிசல் ஏற்படாதது மட்டுமின்றி, பேனர்கள், கட் - அவுட்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் தடுக்கப்படும்.
தமிழகத்தில், பேனர்கள் போன்று, போஸ்டர் கலசாரமும், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசைதிருப்பி, விபத்துக்களுக்கு வழி வகுத்து விடுகிறது. நெடுஞ்சாலைகளில் வைக்கப்படும் கொடி கம்பங்களும், போக்குவரத்து இடையூறாக உள்ளன. எனவே, பேனர்கள், கட்- அவுட்களுக்கு முடிவு கட்டுவதோடு, போஸ்டர் கலாசாரத்திற்கும், அனுமதி இல்லாத இடங்களில், கொடி கம்பங்கள் அமைக்கும் செயல்களுக்கும், அரசியல் கட்சிகள் முடிவு கட்ட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (39+ 72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
17-செப்-201922:01:20 IST Report Abuse
Rajas H ராஜா வருவதற்க்கு நேற்று குமரியில் ஏகப்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
Rate this:
Share this comment
Cancel
Viswanathan - karaikudi,இந்தியா
17-செப்-201921:40:06 IST Report Abuse
Viswanathan ஆரம்பிச்சவன் தானே எதையும் முடிச்சு வைக்கணும் , 9 ஆண்டுகளாக ஆட்சியை இழந்த காரணத்தால் வந்த மாற்றம், ஆனால் நிரந்தரமாக இருக்க வேண்டும் . ஒருவேளை அசம்பாவிதமாக ஆட்சியை பிடித்தால் திரும்ப ஆரம்பிக்க கூடாது , ஏனெனில் இங்கு இந்த கட்சி தான் அனைத்திற்கும் முன் உதாரணம்
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
17-செப்-201921:15:38 IST Report Abuse
bal இன்னும் கொஞ்ச நாட்களில் இந்த பிரமாண பாத்திரம் எரிக்கப்படும்....கோர்ட்டில் சாட்சிகளையே எரித்தவர்கள் இந்த திமுக.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X