எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

சேமிக்க வழி இல்லை வீணாகும் காவிரி நீர்! 'குறட்டை' விடும் பொதுப்பணி துறையால் விவசாயிகள் சோகம்

Updated : செப் 17, 2019 | Added : செப் 16, 2019 | கருத்துகள் (18)
Share
Advertisement
சேமிக்க வழி இல்லை வீணாகும் காவிரி நீர்! '

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், உபரியாக, கடலில் வீணாக கலப்பதற்கு, பொதுப்பணித் துறையின் அலட்சியப்போக்கே காரணம் என, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணை தண்ணீர் மூலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட, 12 மாவட்டங்களில், 16.50 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.ஜூன், 12 முதல், ஜன., 28 வரை குறுவை, சம்பா, தாளடி என, முப்போகத்திற்கும், 230 நாட்களுக்கு, 330 டி.எம்.சி., தண்ணீர் தேவைப்படும். இதில், டெல்டா மாவட்டமான தஞ்சை, திருவாரூர், நாகைக்கு மட்டுமே, 275 டி.எம்.சி., வரை தண்ணீர் தேவை இருக்கும்.குடிமராமத்து பணியை, ஒவ்வொரு ஆண்டும், கோடையில் நிறைவேற்றியிருக்கலாம். ஆனால், அதற்கு பதிலாக, தண்ணீர் திறந்து விடும் காலத்தில், குடிமராமத்து பணியை, அரசு துவங்குகிறது.வாய்க்கால் துார்வாரப்படாமலும், ஆக்கிரமிப்பு மற்றும் கரைகள் பலமில்லாமலும், நீர் நிலைகள் இருக்கின்றன. இதனால், தண்ணீரை சேமிக்க முடியவில்லை.இதனால், மேட்டூர் அணை நிரம்பியும், தண்ணீரை, முழுமையாக வாய்க்கால்களில் திறக்க, பொதுப்பணித் துறை அதிகாரிகள் பயந்து, கொள்ளிடத்திலும், காவிரியிலும் அதிகளவில் திறந்து விடுகின்றனர். இதனால், பல, டி.எம்.சி., நீர் வீணாக சென்று, கடலில் கலக்கிறது.


சாகுபடி


கடந்த ஆண்டு, ஆகஸ்டில், கொள்ளிடம் ஆற்றில், உபரியாக, 227 டி.எம்.சி-க்கும் அதிகமாக தண்ணீர், வீணாகக் கடலில் சென்று கலந்தது.இந்தாண்டு, 13ல், மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நாளிலிருந்து, ஒரு மாதத்திற்கு மேலாகியும், கடைமடை பகுதிகளுக்கு, இதுவரை தண்ணீர் முழுமையாக செல்லவில்லை.மேட்டூர் அணை முழு கொள்ளளவான, 120 அடியை, சில நாட்களுக்கு முன் எட்டியதை தொடர்ந்து, உபரி நீர் முழுமையாக திறக்கப்பட்டதால், ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது.குறிப்பாக, கொள்ளிடத்தில், 30 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் சென்று, நாகப்பட்டினம் பகுதியில், இடது கரையில், கொடியம்பாளையம் என்ற இடத்திலும்; வலது கரையில், பழையார் என்ற இடத்திலும், வங்காள விரிகுடா கடலில் கலந்து வீணாகிறது.கொள்ளிடம் ஆற்றில், எந்தவொரு தடுப்பணையும் இல்லாததால், அந்த தண்ணீர், பாசனத்துக்கு பயன்படாமல் போனது.

மேட்டூரிலிருந்து திறக்கப்படும் காவிரி தண்ணீர், கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் என, நான்கு கிளையாக பிரிந்தும்; அதன் பின் அரசலாறு, வெட்டாறு, மண்ணியார், பாமினியாறு உட்பட, 36 கிளை ஆறுகளாக பிரிகிறது.அதிலிருந்து, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில், 11 ஆயிரம் கி.மீ.,க்கு காவிரி தண்ணீர் பயணித்து, 10 லட்சம் ஏக்கருக்கு, பாசன வசதியை ஏற்படுத்துகிறது. ஆனால் தற்போது, 5 லட்சம் ஏக்கருக்கு குறைவாகவே, சாகுபடி துவங்கியுள்ளது.இது குறித்து, மூத்த வேளாண் வல்லுனர், கலைவாணன் கூறியதாவது:கடந்த, 1936ல், டெல்டா மாவட்ட பாசனத்திற்காக, வாய்க்கால்களை முழுமைப்படுத்த, ஆர்தர் காட்டன் என்ற பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார்.


அலட்சியம்அதன்படி, சில இடங்களில் கரைகளையும், மதகு களையும் சீர் செய்தார். அதற்கான வழிகாட்டுதலையும் ஏற்படுத்தினார்.ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின், அந்த வழிகாட்டுதல் முழுமையாக பின்பற்றப்படவில்லை.வாய்க்கால்களை முழுமைப்படுத்தி, தண்ணீர் செல்ல வசதியாக, சிமென்ட் தளம் அமைத்தும், கரைகளை பலப்படுத்தியும் இருந்திருந்தால், காவிரியிலிருந்து திறக்கும் தண்ணீர், முழுமையாக கடைமடையை எட்டியிருக்கும். கொள்ளிடத்தில், இப்படி உபரி நீரை, அதிகப்படியாக திறந்துவிடத் தேவை இல்லை. அத்துடன் ஏரி, குளங்களை துார் வாரி இருந்திருந்தால், நீரை சேமித்து இருக்கலாம்; அரசின் அலட்சியத்தால், அதற்கும் வழியில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.


கடலில் கலந்த உபரி நீர்


கடந்த, 1936 முதல், 2012 வரை மட்டுமே, 40 முறை, கொள்ளிடம் ஆற்றில், உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தம், 3,025 டி.எம்.சி., தண்ணீர், கொள்ளிடம் ஆற்றில் சென்றுள்ளதாக, பொதுப்பணித் துறையின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது.கடந்த, 2013ல், கொள்ளிடம் ஆறு வழியாக, 12 டி.எம்.சி., தண்ணீர் சென்றுள்ளது. கடந்த ஆண்டு, மேட்டூர் அணைக்கு, 1.40 லட்சம் கன அடி நீர் வரத்து இருந்ததால், காவிரியில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதனால், திருச்சி மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் அணை உடைந்து, தொடர்ந்து, 15 நாள், 141 டி.எம்.சி., தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் சென்றுள்ளது.இதே நிலை, இந்த ஆண்டு வரை தொடர் கதையாகவே உள்ளது. இந்த ஆண்டு, கடந்த 8ம் தேதி முதல், 13ம் தேதி வரை, வினாடிக்கு, 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. இந்த தண்ணீர், கடலில் கலந்து வீணாகியுள்ளது.


பெயரளவுக்கு குடிமராமத்து பணி


டெல்டா மாவட்டங்களில் குடிமராமத்து, துார் வாரும் பணிகளை, ஜூலை இறுதியில் தான், அதிகாரிகள், அவசர கதியில் துவங்கினர். சில இடங்களில் துார் வாரும் பணி சிறப்பாக இருந்தாலும், பல இடங்களில், பெயரளவிற்கே நடந்துள்ளது.உதாரணமாக, தஞ்சை மாவட்டத்தில், கொங்கன் வாய்க்காலில், 5ம் தேதி உடைப்பு ஏற்பட்டது. தற்போது உடைப்பு ஏற்பட்ட இடங்களில், மணல் மூட்டைகளை அடிக்கி வைத்து, தரை தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், 7,000 ஏக்கர் பாசனம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவில், சீர்காழி ஒன்றியங்களில், வாய்க்கால்களுக்கு செல்லும் தண்ணீரை தடுத்து, துார் வாரும் பணி இன்னும் நடக்கிறது. குறிப்பாக, நாகை மாவட்டம், காவிரியின் கடைமடை நீர் தேக்கத்திலிருந்து பிரியும், அகரம் வாய்க்காலில், தண்ணீரை தடுத்து நிறுத்தி, சிமென்ட் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

மழை நீர், ஆறுகள் வழியாக பாய்ந்து, கடலில் கலப்பது இயற்கை தான். ஆனால், 50 சதவீதத்திற்கும் மேலாக தண்ணீர், வீணாக கடலில் சென்று கலப்பது தான், வேதனை. டெல்டா மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்களை, முழுமையாக துார் வாரி இருந்திருந்தால், இது போன்ற பிரச்னை வர வாய்ப்பில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கு தான், தண்ணீர் வீணாக கடலில் கலப்பதற்கு காரணம்.சு.விமலநாதன்தஞ்சை மாவட்ட செயலர்,காவிரி பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்

தஞ்சை மாவட்டத்தில், கொட்டையூரில், காவிரியிலிருந்து பிரியும் வாய்க்கால்களில், இதுவரை தண்ணீர் வரவில்லை. 2013ல், பொதுபணித்துறை முதன்மை செயலரிடம் கொட்டையூர் கிராமத்தில், மேலகொட்டையூருக்கும், கீழகொட்டையூருக்கும் இடையே கதவனை அமைக்க, மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், 1,967 ஏக்கர் பாசன வசதியை முழுமையாக பெற முடியாத நிலை உள்ளது.டி.ராமலிங்கம் விவசாயி, தஞ்சை .- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Ram - madurai,இந்தியா
20-செப்-201916:26:22 IST Report Abuse
Jaya Ram இந்த விவசாயிகள் எல்லாம் கோடை காலத்தில் நன்றாக தூங்கிவிட்டு தண்ணீர் வரும்போது கூக்குரலிடுவார்கள் போனதடவை தண்ணீர் வீணானது தெரியுமல்லவா இவர்கள் என்ன செய்திருக்கவேண்டும் ஜனவரியிலேயே தூர்வார அரசுக்கு உத்தரவிடக்கோரி ஹை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தால் இந்நிலை ஏற்படுமா நாங்களும் இருக்கிறோம் என்று பெட்டிகொடுப்பதுதான் இவர்கள் வேலை இவர்களை சென்று பேட்டிக்கண்டு தங்களின் டிஆர்பி ரேட்டை ஏற்றுக்கொள்வது டிவிக்கள் வேலை அரசு அதிகாரிகள் எப்படா லீவு கிடைக்கும் என்று எதிர்பார்ப்புடனும் அகவிலைப்படி முன்தேதியிட்டு கிடைக்குதா என்றும் மத்திய அரசு அறிவித்தவுடன் உடனே நமக்கு அறிவிக்கணும் என்று போராடத்தெரியும் ஆனால் வேலை மட்டும் பார்க்க கசக்கும். முன்னர் எல்லாம் ஒரு அணை கட்ட என்ஜினீயர்கள் சென்றால் அங்கே பொட்டல் காட்டில் டென்ட் போட்டு தங்கி வேலை பார்க்கணும் இப்போ இந்த வாய்க்கால்கள் தூர்வார பணித்த பணியாளர்கள் சிலர் அப்பகுதிக்கே போகாமல் ஏனென்றால் அங்கே தங்கும் வசதி இல்லையாம் என்றுகூறி அந்த வாய்க்கால்கள் எல்லாம் தூர்வாரப்படாமல் கிடந்தது இப்போ தண்ணீர்வரவும் நடவடிக்கைகளுக்கு பயந்து தூர்வாருகின்றனர் அரசியல்வாதிகளோ நானும் ஒரு விவசாயி என்று முதல்வர் கூறுகிறார் ஆனா தூர்வாரும் நடவடிக்கை எப்போ எடுக்கணும் என்பதில் அரசியல் வாதியாகிவிடுகிறார் எல்லோரும் கூட்டுக்கொள்ளைக்காரர்களே மக்கள் ,அதிகாரிகள் , அரசியல்வாதிகள் திருந்தாமல் இந்நாடு திருந்தாது.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
19-செப்-201903:42:31 IST Report Abuse
skv srinivasankrishnaveni அடப்பாவிகளா pw என்றால் லஞ்சம் தான் முக்கியம் என்று தகுதி சான்றிதழே தரலாம் போல இருக்காங்களே வேலை செய்வோர் எல்லாம் இயற்க்கை அளித்தாலும் அந்த வளம்தனை காப்பாற்றவேண்டாமோ
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
17-செப்-201914:14:33 IST Report Abuse
Lion Drsekar நீதிமன்றம் தானாக முன்வந்து ஏன் இந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது? வரப்போவதே இல்லை எந்த மாற்றமும்,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X