அரசு பஸ்களில் டிக்கெட் போலி ரூ. பல கோடி வருவாய் காலி?| Dinamalar

அரசு பஸ்களில் டிக்கெட் போலி ரூ. பல கோடி வருவாய் காலி?

Updated : செப் 17, 2019 | Added : செப் 17, 2019
Share
புதுப்பிக்கப்பட்ட காந்தி பார்க்கை சுற்றிப்பார்க்க சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர். செயற்கை நீரூற்று, திறந்தவெளி அரங்கம், தியான மையம், சிறுவர் விளையாட பூங்கா என, படுஅமர்க்களமாக இருந்தது. செயற்கை நீரூற்றுக்கு முன், பலரும் குடும்பம் சகிதமாக நின்று, 'செல்பி' எடுத்தனர்.''அக்கா, ரூ.3.25 கோடி செலவழிச்சு, அருமையா அமைச்சிருக்காங்க. பராமரிக்கிற பொறுப்பை தனியாரிடம்
 அரசு பஸ்களில் டிக்கெட் போலி ரூ. பல கோடி வருவாய் காலி?

புதுப்பிக்கப்பட்ட காந்தி பார்க்கை சுற்றிப்பார்க்க சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர். செயற்கை நீரூற்று, திறந்தவெளி அரங்கம், தியான மையம், சிறுவர் விளையாட பூங்கா என, படுஅமர்க்களமாக இருந்தது. செயற்கை நீரூற்றுக்கு முன், பலரும் குடும்பம் சகிதமாக நின்று, 'செல்பி' எடுத்தனர்.''அக்கா, ரூ.3.25 கோடி செலவழிச்சு, அருமையா அமைச்சிருக்காங்க. பராமரிக்கிற பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்கணும்.
இல்லேன்னா, செம்மொழி மாநாடு நினைவு பூங்கா பொலிவில்லாம இருக்கறது மாதிரி, இதுவும் வீணாகிடும்,'' என, பேச்சை துவக்கினாள் மித்ரா.''ஆமாப்பா, நீ சொல்றதும் சரி தான். கோடிக்கணக்குல செலவு செஞ்சு, பூங்கா உருவாக்குறதோடு நிறுத்திடக்கூடாது; தொடர்ந்து பராமரிக்கிறதுக்கு ஏற்பாடு செய்யணும்,'' என்றாள் சித்ரா. இருவரும் பூங்காவை சுற்றிப்பார்த்து விட்டு, வெளியேறினர். கார்ப்பரேஷன் தரப்பில், ஆங்காங்கே, 'பேட்ச் ஒர்க்' செய்து கொண்டிருந்தனர்.அதைப்பார்த்த மித்ரா, ''பேட்ச் ஒர்க் செய்றதுக்கு பதிலா, புதுசா ரோடே போடலாம். மழை பெஞ்சா மறுபடியும் பெயர்ந்து, ரோடெல்லாம் பொத்தல் பொத்தலா மாறிடும். போன வருஷம் புலியகுளத்துக்கு போற ரோட்டுல, திரும்ப திரும்ப 'பேட்ச் ஒர்க்' செஞ்சாங்களே, அந்தக்கதையாகிடும்...''''அப்ப, ரோட்டுல காசு பார்க்க போறாங்கன்னு சொல்லு...''''இருக்கலாம், 'கார்ப்பரேஷன்'னு சொன்னாலே, 'கரப்ஷன்'னுதானே, இதுநாள் வரைக்கும் பெயர் எடுத்துருக்கு. ரெண்டு உயரதிகாரிகளும், கார்ப்பரேஷன் வட்டாரத்துல புது மாற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறாங்க. முடியுமான்னு, பார்ப்போம்,''ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பேக்கரியில், டீ ஆர்டர் செய்த சித்ரா, ''பயங்கரவாதி போல், 'பில்டப்' கொடுத்து, நகை பட்டறையில வேலை பார்க்குற மேற்குவங்க வாலிபரை போலீஸ்காரங்க பிடிச்சாங்களே. விசாரணையில, அதிர்ச்சியாகிட்டாங்களாம்,'' என்றாள்.''ஏன், என்னாச்சு? பாகிஸ்தானை சேர்ந்த சில அமைப்பு நிர்வாகிகள் இருக்கும், 'வாட்ஸ் அப்' குரூப்ல, துப்பாக்கி வாங்குறது தொடர்பா தகவல் பரிமாற்றம் நடந்ததா சொல்லித்தானே, கைது செஞ்சாங்க.
அதுல, அதிர்ச்சியாகுறதுக்கு என்ன இருக்கு?''''அவரோட மொபைல் போனை வாங்கி, 'ஸ்டோரேஜை' பார்த்ததும் 'அப்செட்' ஆகிட்டாங்க. துப்பாக்கி தொடர்பாகவோ, பயங்கரவாதின்னு சொல்ற அளவுக்கோ ஆதாரம் எதுவும் இல்லையாம்...''''அப்புறம்...?''''பல, 'ஜிபி'களுக்கு 'பலான' படங்களே இருந்துருக்கு. அதை பார்க்கவே, பல மணி நேரமாகும்னு, அந்த நபரை அனுப்பி வச்சிட்டாங்களாம்...''''அடக்கடவுளே... இப்படியும் நடக்குமா,'' என்ற மித்ரா, டீயை குடித்து விட்டு, பேக்கரியில் இருந்து வெளியே வந்தாள்.''மித்து, டி.பி., ரோட்டை, 'மாதிரி சாலை'யா மாத்தப் போறதா சொன்னாங்களே...'' என, இழுத்தாள் சித்ரா.''ஆமாக்கா, குடிநீர் குழாய், பாதாள சாக்கடை குழாய் பதிச்சிட்டு இருக்காங்க. மின்வாரியத்துக்காரங்க, ஒத்துவர மாட்டேங்கிறாங்களாம். மின் புதை வடம் பதிக்கிறதுல பிரச்னை இன்னமும் ஓடிட்டு இருக்கு. தாமதத்துக்கு மின்வாரியத்தோட மேல்மட்ட பாலிசி தான் காரணமாம்,'' என்றவாறு, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் மித்ரா.''அதெல்லாம் சரி, கலெக்டர் ஆபீசுக்குள்ள புகைச்சல் உருவாகி இருக்காமே...'' ''அதுவா, கலெக்டர் ஆபீஸ் வளாகத்துல, ஏதாச்சும் ஒரு காரணத்துக்காக, அரசு ஊழியர் சங்கத்துக்காரங்க, மதிய உணவு இடைவேளை நேரத்திலோ, சாயங்காலம் வேலை முடிஞ்ச பிறகோ ஆர்ப்பாட்டம், தர்ணா நடத்துவாங்க.''இதுக்கு முடிவு கட்டுற மாதிரி, இனிமே, கலெக்டர் ஆபீஸ் வளாகத்துக்குள் ஆர்ப்பாட்டம், தர்ணா நடத்தக்கூடாது.
எதுவா இருந்தாலும், ஆபீஸ் வெளியே வச்சுக்குங்கன்னு, மாவட்ட நிர்வாகம் சார்பில், சங்கத்துக்காரங்களுக்கு சுற்றறிக்கை கொடுத்திருக்காங்க,''''அடடே... அப்புறம்?''15 வருஷத்துக்கு முன்னாடியும், இதே மாதிரி பிரச்னை வந்துச்சு. சாயாங்காலம், 5:45 மணிக்கு பிறகோ, விடுமுறை தினங்களிலோ நடக்குற எந்த ஆய்வு கூட்டத்திலும் கலந்துக்க மாட்டோம்னு, சங்கத்துக்காரங்க முடிவு செஞ்சாங்க. ''பிரச்னை வேற விதமா போனதுனால, கொஞ்ச நாள்ல கண்டுக்காம விட்டுட்டாங்க. பழைய பிரச்னையை இப்பயாரோ கிள்ளி விட்டுருக்காங்க...''''எனக்கென்னமோ, அப்படி தெரியலை, ''''அந்த மேட்டர விடு' என்ற மித்ரா, ''போலி டிக்கெட் அச்சடிச்சு வித்தாங்களாமே...'' என, 'ரூட்'டை மாற்றினாள்.
'அதுவா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, கோவை கோட்டத்துல ஓடுற அரசு பஸ்சுல டிக்கெட் 'செக்கிங்' நடந்துச்சு. குறிப்பிட்ட சில ரூட்டுல ஓடுற டவுன் பஸ்களில் போலி டிக்கெட் புழக்கத்துல இருந்ததை, டிக்கெட் பரிசோதகர்கள் கண்டுபிடிச்சிருக்காங்க. உயரதிகாரிகள் சில பேரு உடந்தையா இருக்கலாம்னு பேசிக்கிறாங்க,''''என்னக்கா, இப்படி சொல்றீங்க... பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருக்கும் போலிருக்கே...''''உயரதிகாரிகள் குழு விசாரணை நடத்திட்டு இருக்கு; உண்மையை வெளியே சொல்லுவாங்களா; அமுக்கிடுவாங்களான்னு தெரியலை'' என்றாள் சித்ரா.''பத்திரப்பதிவு துறை பெண் அதிகாரி ஒருத்தரு, கலெக்சன் அள்ளுறாராமே...'' என்றவாறு, காந்திபுரம் பஸ் ஸ்டாண்டை கடந்து, ஸ்கூட்டரை இயக்கினாள் மித்ரா.அப்போது, அன்னுார் செல்லும் பஸ் சிக்னலை கடந்தது.''ஆமா மித்து, நானும் கேள்விப்பட்டேன். ஆனா, ரொம்ப உஷாரா இருக்காங்க. ஆபீசுக்குள் லஞ்சப்பணத்தை வாங்குறதில்லை. ஊர்ல இருந்து 2 கி.மீ., துாரத்துல, நில புரோக்கர் ஒருத்தரு கார்ல 'வெயிட்' பண்ணிட்டு இருப்பாராம். பேரம் பேசுன தொகையை, அவரிடம் கொடுக்கணுமாம். ராத்திரி நேரத்துல, அதிகாரி வீட்டுல, புரோக்கர் ஒப்படைச்சிடுவாராம். நில ஆய்வுக்கு கூட, அந்த அதிகாரி போக மாட்டாராம். 'ஆக்டிங்' அதிகாரி போல, நில புரோக்கர் செயல்படுறாருன்னு சொல்றாங்க''''அப்படியா, லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ்ல சிக்காம இருக்கறதுக்கு, எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க, பாருங்க''''லட்சக்கணக்குல கரன்சி வாங்குனாலும், அந்த அதிகாரி இன்னமும் வாடகை வீட்டுலதான் வசிக்கிறாங்களாம்,'' என, கொசுறு தகவல் சொன்ன மித்ரா, ''மாஜி அமைச்சர் கண்ணப்பன் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியிடுறதுக்கு ஸ்டாலின் வந்துட்டு போனாரே, அதுல, ஏதாச்சும் விசேஷம் இருக்கா,'' என, துருவினாள்.''அந்த விழாவுக்கு முக்கியஸ்தர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்தாங்களாம். மத்தவங்களை கண்டுக்காம விட்டுட்டாங்களாம். கட்சி பிரமுகர்கள் புலம்பிட்டு இருக்காங்க...'' என்றாள் சித்ரா.டவுன்ஹாலை கடந்து சென்றபோது, ''கார்ப்பரேஷன்ல ஏகப்பட்ட பைல்களை காணலையாமே...'' என, நோண்டினாள் மித்ரா.''கார்ப்பரேஷன் எல்லையை விஸ்தரிப்பு செஞ்சப்பா, 11 உள்ளாட்சி அமைப்புகளை இணைச்சாங்க. காளப்பட்டி பேரூராட்சியையும் சேர்த்தாங்க. அங்க இருக்கிற, 162 லே-அவுட்டுகள்ல இருக்கிற, 'ரிசர்வ் சைட்' சம்பந்தமான கோப்புகளை இப்ப காணோமாம்.
''கிட்டத்தட்ட, 70 ஏக்கர் 'ரிசர்வ் சைட்'; ரூ.350 கோடி மதிப்பு இருக்கும்னு சொல்றாங்க. கிழக்கு மண்டலத்துல ஏகப்பட்ட முறைகேடு நடந்துட்டு இருக்கு; உயரதிகாரிகளும் கண்டுக்காம இருக்காங்க...''''ஆனா, 'பயோடேக்' முறையில, 'ரிசர்வ் சைட்'டுகளை ஆவணப்படுத்த போறதா, கார்ப்பரேஷன் கமிஷனர் சொன்னாரே,''''ஆமா, சொன்னாரு. இதுவரைக்கும் ஒரே ஒரு ஜோன்ல மட்டும் நடந்திட்டு இருக்காம். ''மொத்தம், 100 வார்டு இருக்கு. இவுங்க ஆவணப்படுத்துறதுக்குள்ள, ஆக்கிரமிப்பாளர்கள் ஆவணப்படுத்தி வித்துருவாங்க போலிருக்கு,'' என்றாள் சித்ரா.ஒப்பணக்கார வீதியில் உள்ள ஜவுளிக்கடைக்கு முன், வண்டியை நிறுத்தினாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X