தேச பக்தி கொண்ட இந்திய முஸ்லிம்கள்: நக்வி

Updated : செப் 17, 2019 | Added : செப் 17, 2019 | கருத்துகள் (24)
Share
Advertisement

ராம்பூர்: 'பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் இந்திய முஸ்லிம்கள் புறக்கணிப்பார்கள்' என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.



latest tamil news



உ.பி., மாநிலம் ராம்பூரில் நடந்த தேசிய ஒருமைப்பாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நக்வி பேசியதாவது: இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த பாக்., பயங்கரவாத அமைப்புகளும், அந்நாட்டு உள்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. இதற்காக இந்தியாவில் ஆதரவு குழுக்களை தேடுகின்றன. ஆனால் இந்திய முஸ்லிம்களின் தேச பக்திக்கு முன்பு அவர்களின் முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.

இந்திய முஸ்லிம்கள் உறுதியான தேசியவாதிகளாக இருப்பதால், அல்கொய்தா, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புகளால் கூட இந்தியாவில் தடம் பதிக்க முடியவில்லை. பயங்கரவாதம் எவ்வடிவில் வந்தாலும் நம்நாட்டு முஸ்லிம்கள் புறக்கணிப்பார்கள். இறைவன் காட்டிய அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் வழியில் தான் அவர்கள் நடப்பார்கள். இது பாகிஸ்தானுக்கு புரியவில்லை.


latest tamil news



ஆனால் பாகிஸ்தானிலோ, பயங்கரவாதம் என்பது அந்நாட்டு மரபாகவே மாறிவிட்டது. பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் பாக்.,கை, உலக நாடுகள் பலவும் தனிமைப்படுத்திவிட்டன. காஷ்மீர் விவகாரத்திலும் அவர்களுக்கு மூக்குடைப்பு தான். உள்நாட்டு பயங்கரவாதத்தால் பாக்., அழிந்துவிடும். 370 சட்டப்பரிவை பயன்படுத்தி காஷ்மீரில் பயங்கரவாதத்தை தூண்டிவிட்டுவந்த பாக்., பிரதமர் மோடியின் செயலால் கையறுந்த நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
17-செப்-201918:19:14 IST Report Abuse
blocked user தேசபக்தர்கள் நிறையபேர் இருக்கிறார்கள்.. யார் இல்லை என்று சொன்னது. தீவிரவாதிகளும் அதிகம் உண்டு. தீவிரவாதிகளை ஒழித்துக்கட்ட தேசபக்தர்கள் முன்வந்தால் இந்தியா சுபிட்சம் அடையும்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-செப்-201917:51:16 IST Report Abuse
J.V. Iyer உண்மை..உண்மை.. உங்கள் கருத்துக்கள் யாவையும் உண்மை.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
17-செப்-201916:44:37 IST Report Abuse
Sampath Kumar உங்கள் மத பிரிவு சக்திகளிடம் சிக்கி இஸ்லாமியர்கள் குழம்பி போய் நிற்கிறார்கள் 15 ஆம் நூற்றாண்டு வரை இஸ்லாத்தில் இருந்து பல நல்ல படைப்புகள் வந்து கலை , இலக்கிய அறிவியல் பேசப்பட்டது . அனால் சமீப காலமாக வன்முறையை மட்டுமே முன்னிறுத்தி அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டு உள்ளது . இந்த நிலையில் inku வாழும் முஸ்லீம் சமுகத்தின் நிலைப்பாடு உங்களின் எதிர் காலத்தை தீர்மானிக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X