டில்லியை தாக்க திட்டம்; என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை

Added : செப் 17, 2019
Share
Advertisement

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், பாக்., ஆதரவு பெற்ற, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள், கடந்த மார்ச்சில், தற்கொலை தாக்குதலை நடத்தினர். இதில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த, 44 வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, முதாசிர் அகமது கான் என்ற பயங்கரவாதியை, பாதுகாப்பு படையினர், கடந்த மார்ச்சில் சுட்டுக் கொன்றனர். இவரது, கூட்டாளியான சஜத் அகமது கான் என்ற பயங்கரவாதியை, தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.

டில்லி நீதிமன்றத்தில், இவர் மீது குற்றப்பத்திரிகை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், சஜத் அகமது கான், டில்லி உட்பட, பல்வேறு இடங்களில், பயங்கர தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X