மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து

Updated : செப் 17, 2019 | Added : செப் 17, 2019 | கருத்துகள் (37)
Advertisement

புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்காக மோடிக்கு பா.ஜ தலைவர்கள் மட்டுமின்றி பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.பிரதமர் மோடி இன்று(செப்.,17) தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மோடிக்கு நாட்டுமக்களுடன் பல முக்கிய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரமருக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் சில ஹேஷ்டேகுகளும் டிரெண்டிங் ஆகி வருகின்றன. பிரதமர் மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு: பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவரது தலைமையில், நாடு வளர்ச்சி பெறுகிறது. மோடி தலைமையிலான அரசில் எடுக்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளால், இந்தியாவிற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. அவர், நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் கூறுகையில், நமது பிரதமர், நாடுகளின் நட்புறவை பொறுத்தவரை இந்தியாவின் நிலையை கட்டியெழுப்புவதற்கும் பலப்படுத்துவதற்கும் முக்கிய பங்காக இருக்கிறார். "அவரது தொலைநோக்குத் தலைமை இந்தியாவுக்கு புதிய பெருமைகளை உயர்த்த உதவியுள்ளது. அவரது நல்ல ஆரோக்கியத்துக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன் ”.மத்திய ரயில்வேதுறை அமைச்சரான பியூஸ் கோயல் : பிரதமர் மோடி மிகப்பெரிய தலைவர். தீர்க்கமானவர். மோடி நம்க்கு மிகப்பெரிய முன்னோடி. நாம் அனைவரும் இணைந்து புதிய இந்தியாவை உருவாக்க பாடுபடுவோம். அவர் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். மோடிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


பிரதமர் நரேந்திர மோடிக்கு பல பாஜக தலைவர்களிடமிருந்தும், கட்சி முழுவதிலுமிருந்து வந்தவர்களிடமிருந்தும் வாழ்த்துக்கள் நள்ளிரவு முதல் கொட்டத் தொடங்கின.பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித் ஷா கட்சியின் 'சேவா சப்தா' (சேவை வாரம்) செப்டம்பர் 14 அன்று தொடங்கினார். மையத்தில் உள்ள ஆளும் கட்சி செப்டம்பர் 14-20 முதல் நாடு முழுவதும் எண்ணற்ற சமூக முயற்சிகளை மேற்கொள்ளும். பிரதமர் செய்த சமூகப் பணிகளைக் காண்பிப்பதற்காக ஏராளமான கண்காட்சிகள் உள்ளன.

சுரேஷ் பிரபு கூறுகையில், பிரதமர் மோடியின் தலைமைப் பண்பு பல விதங்களை கொண்டது. சிறு நகரத்திலிருந்து உலகின் தலைநகரங்களுக்கு, கட்சி உறுப்பினர்களிலிருந்து தேசிய தலைவர், கட்சி ஒருங்கிணைப்பாளராக இருந்து சிறந்த நிர்வாகி, பூத் ஏஜெண்டாக இருந்து உலகின் சிறந்த தலைவர் என உருவெடுத்த பிரதமர் மோடியின் வாழ்க்கை பயணம் நமக்கு உத்வேகத்தை அளிக்ககூடியது. அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

திமுக தலைவர் ஸ்டாலின், திமுக சார்பில், பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதுடன், இன்னும் பல ஆண்டுகள் பொது சேவை செய்ய வாழ்த்துகள்.


தமிழக முதல்வர் இபிஎஸ், பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நாட்டுக்கு சிறப்பாக சேவையாற்ற நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ், பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியுடன் வாழ பிரார்த்திக்கிறேன்.

காங்கிரஸ் தலைவர் சோனியா வெளியிட்ட வாழ்த்து செய்தி: ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் மோடி நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துகிறேன்.

காங்கிரஸ் எம்.பி., ராகுல்: பிரதமர் மோடிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள். அவர், நல்ல உடல்நலத்துடனும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும்.
இவ்வாறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Trichy,இந்தியா
17-செப்-201919:39:58 IST Report Abuse
Raj மோடிஜி அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
Rate this:
Share this comment
Cancel
D.RAMIAH - RAIPUR,இந்தியா
17-செப்-201918:24:54 IST Report Abuse
D.RAMIAH திரு மோடி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
17-செப்-201916:56:16 IST Report Abuse
srinivasagan wish you happy birthday to my beloved prime minister Mr.Narandra Modi ji .. many more happy returns of the day by srinivasagan karuppiah
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X