பொது செய்தி

தமிழ்நாடு

நாலு நாள் முடங்குது வங்கி: திட்டமிடாவிட்டால் சிக்கல்

Updated : செப் 17, 2019 | Added : செப் 17, 2019 | கருத்துகள் (55)
Share
Advertisement
வங்கிகள், ஸ்டிரைக், இணைப்பு

சென்னை: ஸ்டிரைக் மற்றும் விடுமுறை தினங்களால், தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கி சேவையை பயன்படுத்த முடியாது; வாடிக்கையாளர்கள், முன்னதாகவே திட்டமிட்டு பணிகளை முடிக்க, வங்கியாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.
மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன், 10 பொது துறை வங்கிகள் இணைக்கப்படும் என, ஆக., 31ல் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, செப்., 1ல், வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். தற்போது, வரும், 26 மற்றும்27 ம் தேதிகளில் இரண்டு நாட்கள் வங்கி அதிகாரிகள் மட்டும், வேலை நிறுத்தத்தில் ஈடுபடஉள்ளனர். அதனால், வங்கி பணிகள் அனைத்தும் பாதிக்கப்படும். வரும் 28ம் தேதி, நான்காவது சனிக்கிழமை, 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. எனவே, தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கி சேவையை பயன்படுத்த முடியாது.


latest tamil newsபணம் செலுத்துவது, பணம் எடுப்பது, காசோலை பரிமாற்றம் என பல்வேறுதேவைகளுக்கு தொழில்முனைவோர், தொழிலாளர்கள், பொதுமக்கள் தினமும் வங்கிகளை நாடுகின்றனர். ஸ்டிரைக், விடுமுறை தினங்கள் என, தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கி சேவை பாதிக்கப்படும் என்பதால், வாடிக்கையாளர்கள், முன்னதாகவே திட்டமிட்டு வங்கி பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஏ.டி.எம்., மையங்களில் தனியார் நிறுவனங்கள் பணம் நிரப்புகின்றன, நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், ஏ.டி.எம்.,ல் பணம் தட்டுப்பாடின்றி நிரப்புவதிலும் சிரமம் ஏற்படலாம். எனவே, அனைத்து தரப்பினரும், வங்கி சார்ந்த பணிகளை முன்னரே முடித்துக்கொள்ள வேண்டும். அவசர தேவைகளுக்கான தொகையை, முன்னரே எடுத்து வைத்துக்கொள்ளலாம்.

Advertisement
வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
19-செப்-201914:39:31 IST Report Abuse
B.s. Pillai The economy is in standstill. The bank employees struck work in this month on 1-9-19 Sat 2-9-19 sunday 3-9-19 Vinayaka Chathurthi holiday. Now again 4 days in the same month. They are totally responsible for the present status of the economy. 70000crore loss during this year because small debts given by the staff is not returned loss in ATM but the blame goes to the Government. Nirav Modi case is totally the handiwork of bank staff , jointly with him. Only initially Raghul permitted it then the bank staff found a loop hole to transfer huge fund to him. most of the NPAs are due to haphazard manner the loan was sanctioned jointly with the parties.They are greedy and stop at nothing.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
18-செப்-201910:50:41 IST Report Abuse
Natarajan Ramanathan நாம் கடைசியாக நமது வங்கிக்கு எப்போது சென்றோம் என்று சிந்தித்து பாருங்கள்.. ATM, ONLINE TRANSACTION என்று வங்கிக்கு செல்லாமலே நமது வேலைகள் நடக்கிறது. சென்ற ஞாயிறு அன்று எனது காரை OLX மூலம் விற்பனை செய்தேன். வீட்டுக்கே வந்த OLX கார் சோதனை முடிந்தவுடன் ONLINE மூலம் எனது அக்கவுண்டில் பணம் செலுத்தி காரை எடுத்துச்சென்றனர். எல்லாம் ஒரு மணி நேரத்தில் முடிந்தது.
Rate this:
Share this comment
Cancel
sundaram krishna - new delhi,இந்தியா
18-செப்-201910:10:59 IST Report Abuse
sundaram krishna இவர்கள் செப்டம்பர் முப்பது மற்றும் அக்டோபர் ஒன்று வேலை நிறுத்தம் செய்தால் அக்டோபர் இரண்டு காந்தி ஜெயந்தி சேர்த்து ஐந்து நாட்கள் விடுமுறை கிடைக்குமே… ஏன் இப்படி யோசிக்க வில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X