பொது செய்தி

இந்தியா

இயற்கையை காப்போம்: பிரதமர் மோடி

Updated : செப் 17, 2019 | Added : செப் 17, 2019 | கருத்துகள் (46)
Advertisement
HappyBdayPMModi, happybirthdaynarendramodi, HappyBirthdayPM, 
NarendraModiBirthday, Prime Minister, மோடி, பிறந்த நாள்

கிவடியா: இயற்கையை காப்பது நமது கடமை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நர்மதா மாவட்டம் கிவடியா மாவட்டம் வந்தார். மோடியை, கவர்னர், முதல்வர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து, அங்கிருந்து, கல்வானி சுற்றுச்சூழல் பூங்காவை பார்வையிட்டார்.
Advertisement

அங்கு செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்களையும் மோடி பார்வையிட்டார். பின்னர் பட்டாம்பூச்சி தோட்டத்துக்கும் சென்றார். அங்கு பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டார்.

பின்னர், சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைந்துள்ள பகுதிக்கு சென்ற மோடி, சுற்றுச்சூழல் உகந்த பொருட்கள் தயாரிக்கும் பணியையும் பார்வையிட்டார். பொருட்கள் செயல்முறை குறித்து கேட்டறிந்தார்.


இதன் பின்னர், சர்தார் சரோவர் அணையை பார்வையிட்ட மோடி, அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து பூஜையும் செய்தார்.
தொடர்ந்து, குருதேஸ்வர் கோவில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.

பின்னர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:குஜராத்தில், கிராமங்களும், நகரங்களும் நீர் வழிப்பாதையில் இணைக்கப்பட்டு உள்ளன. படேலின் கனவு இன்று நிறைவேறி உள்ளது.
முதல்முறையாக சர்தார் சரோவர் அணை நிரம்பியுள்ளது. இந்த அணை, குஜராத், ம.பி., மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களின் தேவையை நிறைவேற்றுகிறது. இயற்கையை பத்திரமாக காப்பது நமது கடமை. நாட்டின் பெரிய சொத்து இயற்கை. சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் மூலம் வளர்ச்சி பெற முடியும் என்பது நமது கலாசாரத்தில் நம்பப்படுகிறது. அது இன்று உறுதியாகி உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான உகந்த நேரம் வந்துள்ளது. எதிர்காலத்தை பாதுகாக்க தண்ணீரை சேமிக்க வேண்டும்.இந்த நேரத்தில் நிலையான வளர்ச்சி தான் தேவை.
ஒரு துளி, நிறைய பயிர் என்பது தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.சொட்டு நீர் பாசன திட்டங்கள் விவசாயிகளுக்கு பெரிய பலன் அளித்து வருகிறது.கடந்த 2001 ல் 14 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் மட்டுமே சொட்டு நீர் பாசன வசதி பெற்றன. 8 ஆயிரம் விவசாய குடும்பங்கள் பயன்பெற்றன. ஆனால், இன்று 19 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் சொட்டு நீர் பாசன வசதி பெறுவதுடன் 12 லட்சம் குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன.பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக ஒவ்வொரு குடிமகனும் போராட வேண்டும்.காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி மக்கள் வேறுபாட்டை சந்தித்து வந்தனர். இதனால், படேல் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு காஷ்மீர் விவகாரத்தில் , பல ஆண்டுகள் பிரச்னையை தீர்க்க முடிவு எடுத்தோம். 133 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுதந்திர தேவி சிலையை தினமும் 10 ஆயிரம் பேர் பார்க்கின்றனர். ஆனால், 11 மாதங்களே ஆன படேல் சிலையை தினமும் 8,500 பேர் பார்வையிடுகின்றனர். இவ்வாறு மோடி பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திராவிடன் - bombay,இந்தியா
17-செப்-201919:02:24 IST Report Abuse
திராவிடன் ஆக இயற்கை வளங்கள் தனியாருக்கு தாரைவார்க்க போகின்றது
Rate this:
Share this comment
Sudarsanr - Muscat,ஓமன்
18-செப்-201910:30:22 IST Report Abuse
Sudarsanrசுடலை குடும்பத்துக்கா ?...
Rate this:
Share this comment
Cancel
17-செப்-201917:56:38 IST Report Abuse
Chandran Mr.Thandu i left my LPG subsidiary 5 years before. ie. before Modijis request. First tell me whether you have left
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-செப்-201917:49:12 IST Report Abuse
J.V. Iyer இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மோடிஜி பல்லாண்டு வாழ்க. உடலும் உள்ளமும் ஆரோக்யமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறோம். அப்போதுதானே இந்தியாவுக்கு நல்லது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X