சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓமலூரில் கழிவுநீர் கொட்டிய செப்டிக் டேங்க் வாகனம் பறிமுதல்

Added : செப் 17, 2019
Share
Advertisement

ஓமலூர்: மேம்பாலம் அருகே, கழிவு நீர் கொட்டிய வாகனத்தை பிடித்த த.மா.கா.,வினர், போலீசில் ஒப்படைத்தனர். ஓமலூரிலிருந்து, சேலம் செல்லும் வழியில் உள்ள நெடுஞ்சாலை துறை மேம்பாலம் அருகே உள்ள பள்ளத்தில், கோழி, இறைச்சி கழிவுகள் குவிக்கப்படுகின்றன. த.மா.கா., மற்றும் ஓமலூர் இளந்தளிர் நற்பணி மன்றம் சார்பில், கடந்த சில நாட்களாக அவ்விடத்தை தூய்மை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில், குப்பை கொட்டக்கூடாது என, எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் இரவு, சூரமங்கலத்திருந்து வந்த செப்டிக் டேங்க் வாகனத்திலிருந்து கழிவு நீரை, சுத்தம் செய்யப்பட்டு வந்த மேம்பாலம் அருகே உள்ள பள்ளத்தில் கொட்டிக் கொண்டிருந்தனர். அதை கண்ட, த.மா.கா.,வினர் வாகனத்தை சிறைபிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், சேலம் சோளம்பள்ளத்தைச் சேர்ந்த அருண், 65, சூரமங்கலத்திலிருந்து கழிவு நீரை எடுத்து வந்து கொட்டியது தெரிந்தது. வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X