பொது செய்தி

தமிழ்நாடு

சைக்கிளில் சென்ற மாணவரை மடக்கிய போலீஸ்

Added : செப் 17, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை: சைக்கிளில் சென்ற பள்ளி மாணவரிடம் போலீஸ் எஸ்.ஐ., ஹெல்மெட் கேட்டு பிடித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தமிழகம் முழுவதும் சாலை போக்குவரத்து, விதிகளை நெறிப்படுத்துவதில், போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம், ஏரியூர் போலீஸ் ஸ்டேசன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், சிறப்பு போலீஸ் எஸ்.ஐ., சுப்பிரமணி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பள்ளி மாணவர் ஒரவர், அந்த சாலை வழியாக, சைக்கிளில் சென்றார். அப்போது, அந்த மாணவரை அழைத்து சென்று நிறுத்திய சுப்பரிமணி, அந்த சைக்கிளை பூட்டு போட்டார். எதற்காக போலீசார் நிறுத்தினர் என தெரியாமல், அந்த மாணவர் , திகைத்தபடியே அங்கு நின்று கொண்டிருந்தார். ஹெல்மெட் போடவில்லை என்பதால், போலீசார் அபராதம் செலுத்த கூறியதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவர், பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஒரு மணி நேரம் காக்க வைத்த பின்னர், அந்த மாணவரையும், சைக்கிளையும் விடுவித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-செப்-201912:59:06 IST Report Abuse
தமிழ்வேல் ஆனைக்கு அர்ரம், பூனைக்கு புர்ரம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X