பொது செய்தி

தமிழ்நாடு

சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக்க போராட்டம்

Updated : செப் 17, 2019 | Added : செப் 17, 2019 | கருத்துகள் (7)
Advertisement
சங்கரன்கோவில், மாவட்டம்

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை மையமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், விசைத்தறி கூடங்கள் முடியும் அடையாள ஒரு நாள் போராட்டம் நடத்தினர்.

முதல்வர் இ.பி.எஸ்., சில மாதங்களுக்கு முன்பு, விதி எண் 110ன் கீழ் தென்காசியை மையமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என அறிவித்தார். சங்கரன்கோவிலையும் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்
இதனைத்தொடர்ந்து இன்று (செப்., 17 ஒரு நாள் போராட்டமாக அரசுக்கு எதிர்ப்பை காட்டும் பொருட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்தும், விசைத்தறி கூடங்களை மூடியும், தங்களுடைய எதிர்ப்பை காட்டும் விதமாக போரட்டம் நடத்தினர். தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்கவும் பொது மக்கள் திட்டமிட்டு உள்ளனர். இந்த போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அருண்நம்பி - Chennai,இந்தியா
17-செப்-201914:04:20 IST Report Abuse
அருண்நம்பி வள்ளியூரை தலைமையாக கொண்டு நாங்குநேரி, ராதாபுரம் சட்டமன்ற தொகுதி உள்ளிட்ட பகுதியை இணைத்து புது மாவட்டம் உருவாக்க வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
17-செப்-201913:26:53 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இனி ஒவ்வொரு பஞ்சாயத்தையும் தனி மாவட்டமாக அறிவித்து விட வேண்டியது தான்.
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
17-செப்-201913:20:05 IST Report Abuse
ரத்தினம் எல்லாப்புகழும் கட்டு மரத்துக்கே. அந்த காலத்தில் அண்ணா மாவட்டம், பெரியார் மாவட்டம், காயிதே மில்லத் மாவட்டம், பசும்பொன் முத்து ராமலிங்கம் மாவட்டம் ன்னு அரசியல் தலைவர்கள் பெயரில், ஜாதி தலைவர்கள் பெயரில் மாவட்டங்களும் போக்கு வரத்துக்கழகங்களும் வந்தன. ஜாதி கலவரத்தால் தமிழ் நாடு பற்றி எரிந்ததால் கட்டுமரம் பயந்து ஜகா வாங்கினார். சொந்த மற்றும் அரசியல் ஆதாயத்துக்காக செய்த எல்லா செயல்களுக்கும் ஆரம்பமே கட்டு மரம் தான். வாசகர் ராஜா சொன்ன மாதிரி கட்டு மரத்தின் வழியில் திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர் ன்னு 25 கிமீ க்கு ஒரு மாவட்டம் வீதம் புதிய மாவட்டங்கள் வந்ததன. இப்போது எல்லோரும் கேட்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X