ஹெல்மெட் அணியாமல் சென்ற 43,600 பேர் பலி: உ.பி., முதலிடம்

Updated : செப் 17, 2019 | Added : செப் 17, 2019 | கருத்துகள் (15)
Share
Advertisement
ஹெல்மெட் , உ.பி., முதலிடம்

புதுடில்லி: கடந்த 2018 ம் ஆண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில், ஹெல்மெட் அணியாமல் டூவிலரில் சென்ற, 43,600 உயிரிழந்தனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 21 சதவீதம் அதிகம். ஹெல்மெட் அணியாமல், டூவிலர் பின்னால் அமர்ந்து சென்ற 15,360 பேரும் உயிரிழந்துள்ளனர்

கடந்த ஆண்டு, குஜராத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 958 வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து சென்ற 560 பேரும் உயிரிழந்தனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில், 790 பேரும், பின்னால் அமர்ந்து சென்ற 450 பேரும் உயிரிழந்தனர். இந்த இரு மாநிலங்களிலும், டூவிலர் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கு சலுகை அளிக்கப்பட்டது. டூவிலரில் பின்னால் அமர்ந்து வருபவர்களுக்கு ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என மாநில அரசுகள் அறிவித்துள்ளன.


latest tamil news



கடந்த ஆண்டு, ஹெல்மெட் அணியாமல் டூவிலரில் சென்று உயிரிழந்தவர்களில், உ.பி., மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு, 6.020 பேர் உயிரிழந்தனர். 2வது இடத்தில் மஹாராஷ்டிரா அரசு (5,232) உள்ளது. தமிழகத்தில், 5,048 வாகன ஓட்டிகள் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல், கடந்த ஆண்டு, காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்று,24,400 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவும் கடந்த ஆண்டை காட்டிலும் அதிகம்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri,India - India,இந்தியா
17-செப்-201918:28:23 IST Report Abuse
 Sri,India பிளக்ஸ் போர்டு விழுந்து ஹெல்மெட் போட்டும் செத்துப்போன சுப ஸ்ரீ போன்றவர்களும் இருக்கிறார்கள் . முதலில் போதை கடைகளை இரவில் மூடுங்கள் ....விபத்துக்களை குறையும் .
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
17-செப்-201916:35:36 IST Report Abuse
Endrum Indian இது சுத்த ஹம்பக். வெகு வேகமாக சென்ற வாகனத்தினால் (வேகமான வாகனம் வந்து மோதியதால்) தான் இந்த மரணம் தலைக்கவசம் இருந்தாலும் இல்லாவிட்டாலும். உண்மை தெரியவேண்டுமா??தலைக்கவசம் அணியுங்கள். தலைக்கவசத்தில் கொட்டச்சொல்லுங்கள் அப்போது தான் தெரியும், தலைக்கவசம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதே நிலைதான் என்று. சாதாரண வேகத்தில் சென்று தவறி விழுந்தால் மரணம் நிகழவே நிகழாது
Rate this:
Cancel
17-செப்-201915:47:43 IST Report Abuse
ஆப்பு ஹெல்மெட் போட்டுக் கூட விபத்தில் உயிரை விட்டவங்க எத்தனை பேர் சாமி?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X