கறுப்பு பூனை பாதுகாப்பு: மறுத்த அமித்ஷா

Updated : செப் 17, 2019 | Added : செப் 17, 2019 | கருத்துகள் (41)
Advertisement
Amit Shah, NSG security,  CRPF cover, அமித்ஷா, சிஆர்பிஎப், கறுப்பு பூனை, என்எஸ்ஜி பாதுகாப்பு

புதுடில்லி: தேசிய பாதுகாப்பு படை(என்எஸ்ஜி) பாதுகாப்பை ஏற்க மறுத்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனக்கு சிஆர்பிஎப் வீரர்களின் பாதுகாப்பே போதும் என கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், இசட் பிளஸ் பிரிவின் கீழ், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். அவரது பாதுகாப்பில் 100 சிஆர்பிஎப் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் மோடிக்கு, அடுத்து அவருக்கு பெரிய அளவில் அச்சுறுத்தல் உள்ளதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து, தலைவர்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, அச்சுறுத்தல் குறித்து அமித்ஷாவிடம் விளக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்துவிட்ட அமித்ஷா, தனக்கு சிஆர்பிஎப் வீரர்களின் பாதுகாப்பே போதும் எனக்கூறிவிட்டார். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.






முன்னதாக, உள்துறை அமைச்சர்களாக இருந்த ராஜ்நாத், சிதம்பரம், சுஷில் குமார் ஷிண்டே, சிவராஜ் சிங் பாட்டீல் ஆகியோர் என்எஸ்ஜி பாதுகாப்பில் தான் இருந்தனர்.

அமித்ஷா வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் டில்லி போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் தான் 6ஏ கிருஷ்ண மேனன் மார்க் முகவரியில் அமித்ஷா குடியேறினார். அங்கு டில்லி போலீசை சேர்ந்த 50 பேர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
18-செப்-201902:40:22 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் உண்மையான பாதுகாப்பு உள்ள நாடு என்றால் நாட்டின் எந்த பகுதிக்கும் பாதுகாப்பு எதுவும் இல்லாமல் ஒரு நாட்டு தலைவனோ, பிரஜையோ செல்ல முடிவது தான். பத்து லட்சம் கோடி உள்துறை பாதுகாப்பு பட்ஜெட், அதை விட பலமடங்கு அதிகம் ராணுவ தளவாட பட்ஜெட். அம்புட்டு இருந்தும் தனி மனுஷனுக்கு பாதுகாப்புக்கு துப்பில்லை. அப்படியான ஒரு ஆட்சி, அமைப்பு. இந்த அசிங்கத்துக்கு தலைமை வகிக்கும் ஒரு அரசியல் ரவுடி. ஒருத்தன் சிங்கம்ங்குறான். இன்னொருத்தன் தலைவன்டாங்குறான்.. அவர்களுக்கேத்த தலைமை தான் வாய்த்திருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
18-செப்-201902:34:37 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பாதுகாப்பில் 100 சிஆர்பிஎப் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 6ஏ கிருஷ்ண மேனன் மார்க் முகவரியில் அமித்ஷா குடியேறினார். அங்கு டில்லி போலீசை சேர்ந்த 50 பேர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆக நூத்தம்பது பத்தல்லே.. புலிக்கு பயந்தவன் எல்லாம் எம்மேலே படுத்துக்குங்கடான்னு கூவுற மாதிரி இருக்கு.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
17-செப்-201921:42:20 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் காவி புலிப்படைன்னு ஆரம்பிக்க போறாரோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X