அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக, அதிமுக, தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

Added : செப் 17, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
திமுக, அதிமுக, தேர்தல் ஆணையம், ஐகோர்ட், சென்னை

சென்னை: கட்சியில் உறுப்பினர்கள் இல்லாதவர்கள் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வென்றது செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கில் திமுக, அதிமுக, தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.

திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற 4 பேரின் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி ரவி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, உறுப்பினராக இல்லாதவரை அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதி அளித்தது தேர்தல் நடைமுறைகளை மோசடி செய்வது ஆகாதா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு விளக்கமளித்த தேர்தல் ஆணையம், சின்னங்கள் ஒதுக்கீடு உத்தரவுபடி ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் மற்றொரு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது. தேர்தல் அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட விதிகளின் படியே வேட்பு மனு ஏற்கப்பட்டது. அதனால் தேர்தல் வழக்காக தான் தொடர முடியும். இவ்வாறு தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது.

இந்த வழக்கில் கட்சி உறுப்பினர்களாக இல்லாதவர்களை வேட்பாளராக நிறுத்திய திமுக, அதிமுக, பிற கட்சிகள் மற்றும் அதற்கு அனுமதியளித்த தேர்தல் ஆணையம் நவ., 12ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-செப்-201918:27:26 IST Report Abuse
தமிழன் சூப்பர் ....இப்படி ஒரு கடிவாளம் கண்டிப்பாக வேண்டும்
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
17-செப்-201914:59:54 IST Report Abuse
GMM கட்சி உறுப்பினர் இல்லை. ஆனால், கட்சி வேட்பாளர் என்று மனு தாக்கல். போட்டி. தேர்தல் அதிகாரி விதிமுறையை பார்க்க வேண்டும். கட்சி சார்பில் போட்டியிட கட்சி உறுப்பினர் ஆக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று விதி இருந்தால் மட்டுமே வெற்றி முறையானது.உ தேர்தல் ஆணையம், நீதிமன்றம் விதி இல்லாத வெற்றியை உடனடியாக முடக்க வேண்டும். பதவி ஆயுள் 5 ஆண்டு. நோட்டீஸ், விசாரணை, தீர்ப்பு வரை செல்லும் என்றால் சம நீதி ஆகாது.
Rate this:
Cancel
krish - chennai,இந்தியா
17-செப்-201914:59:34 IST Report Abuse
krish ஒரு கட்சியின் அடிப்படை உறுப்பினர் அல்லாதவர், தேர்தலில் நிக்க விண்ணப்ப படிவம் தாக்கல் செய்யும் முன், நிற்க கோரும் கட்சியின் உறுப்பினர் ஆகாதவர், தான் சார்ந்த கட்சி மாறாமல், தேர்தலில் மாற்று கட்சி சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க கூடாது அவர் தேர்தல் போட்டியிடும் விண்ணப்பத்தை அப்போதே தள்ளுபடி செய்யவேண்டும். விதி மீறி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், அவரை சுயேச்சை உறுப்பினராகவே அங்கீகரிக்க வேண்டும். கட்சி தாவல் சட்டத்தை திருத்தும் செய்து, சட்ட ஓட்டைகளை அடைக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X