இந்தியும் இந்தியாவும்: திரிபுரா முதல்வர் கேள்வி| No love for Hindi is no love for India: Tripura CM Biplab Kumar Deb | Dinamalar

இந்தியும் இந்தியாவும்: திரிபுரா முதல்வர் கேள்வி

Updated : செப் 17, 2019 | Added : செப் 17, 2019 | கருத்துகள் (40)
Share
புதுடில்லி: இந்தி மொழியை, தேசிய மொழியாக அறிவிப்பதை எதிர்ப்பவர்கள், இந்தியாவை விரும்பாதவர்கள் என திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்தியை தேசிய மொழியாக அறிவிப்பதை எதிர்ப்பவர்கள், தேசத்தை விரும்பாதவர்கள். நாட்டின் பெரும்பாலான மக்கள், இந்தி பேசுவதால், அந்த மொழியை தேசிய மொழியாக அறிவிப்பதை வரவேற்கிறேன். ஆங்கிலேயர்கள், 200
Hindi, India, Tripura, Biplab Kumar Deb, ஹிந்தி, பிப்லப் குமார் தேப், இந்தியா

புதுடில்லி: இந்தி மொழியை, தேசிய மொழியாக அறிவிப்பதை எதிர்ப்பவர்கள், இந்தியாவை விரும்பாதவர்கள் என திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்தியை தேசிய மொழியாக அறிவிப்பதை எதிர்ப்பவர்கள், தேசத்தை விரும்பாதவர்கள். நாட்டின் பெரும்பாலான மக்கள், இந்தி பேசுவதால், அந்த மொழியை தேசிய மொழியாக அறிவிப்பதை வரவேற்கிறேன். ஆங்கிலேயர்கள், 200 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்யாவிட்டால், ஆங்கிலம் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருந்திருக்காது. காலனி ஆட்சிக்கு விஸ்வாசமாக இருந்த காரணத்தினால் தான், சிலருக்கு ஆங்கிலம் தகுதி சின்னமாக மாறி உள்ளது.

ஆங்கிலம் பேசும் நாடுகள் மட்டும் வளரவில்லை. ஜெர்மனி, ஜப்பான், ரஷ்யா, இஸ்ரேல் போன்ற நாடுகள் வளரவில்லையா? ஆங்கிலம் தெரியாமல், வங்காளம் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் பேசும் மக்கள், அரசின் உதவியை எதிர்பார்க்கும் போது, அதிகாரிகள் மெதுவாக உதவுகின்றனர். ஆங்கிலத்தில் கேட்கும் போது உடனடியாக செய்கின்றனர். இவ்வாறு நடக்கக் கூடாது. இவ்வாறு பிப்லப் குமார் கூறினார்.


latest tamil news
சில நாட்களுக்கு முன்னர், தேசிய மொழியாக இந்தியை அறிவிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். இதற்கு, தமிழகம், கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X