மறந்தது லக்கேஜ்: பறந்தது விமானம்

Updated : செப் 17, 2019 | Added : செப் 17, 2019 | கருத்துகள் (20)
Advertisement

புதுடில்லி: டில்லியில் இருந்து இஸ்தான்புல் சென்ற இண்டிகோ விமானத்தில் பயணிகளின் உடமைகளை மறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.






நேற்று (செப்., 16) டுவிட்டர் டிரண்டிங்கில் தனியார் விமான நிறுவனமான இண்டிகோ குறித்து #ShameonIndiGo என்ற ஹேஸ்டேக் அதிகமாக பகிரப்பட்டது. இது குறித்து ஆராய்ந்ததில் செப்., 15ம் தேதி டில்லியில் இருந்து இஸ்தான்புல் சென்ற இண்டிகோ விமானம், பயணிகளின் உடமைகளை மறந்து வைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிகழ்வு குறித்து சின்மே டப்கே என்ற டுவிட்டர் பயனாளி வெளியிட்ட பதிவின் மூலம் இந்த விவகாரம் தெரிய வந்தது.





இண்டிகோ விமானத்தில் டில்லியில் இருந்து இஸ்தான்புல் சென்றேன். இஸ்தான்புல் விமான நிலையத்தில் உடமைகளுக்காக காத்திருக்கும் போது ஒரு பேப்பர் கொடுத்தனர். அதில், எந்தவித உடமைகளையும் விமானத்தில் ஏற்றவில்லை என தெரிவிக்கப்பட்டது. பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, பயணிகளின் உடமைகளை எப்படி மறக்க முடியும்.





சில பயணிகளின் உடமைகளை மட்டும் மறந்தால் பரவாயில்லை, அனைத்து பயணிகளின் உடமைகளையுமா மறப்பது. டில்லியில் உள்ள விமான ஊழியர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர். என் தந்தை ஒரு நீரிழிவு நோயாளி. அவர் தினமும் உட்கொள்ளும் மருந்துகள் அனைத்தும் அவரின் உடமைகளில் தான் இருக்கிறது.


இந்த சம்பவத்தில் நேர்மறையான விஷயம் என்னவெனில் இஸ்தான்புல் விமான நிலைய ஊழியர்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்து உதவினர். இதனால் எங்கள் உடமைகளை கண்டறிந்து எங்களிடம் திருப்பி கொடுக்கும் படிவத்தை பூர்த்தி செய்ய முடிந்தது. 130க்கும் மேற்பட்ட இந்தியர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளீர்கள். இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

பெரிய விமான நிறுவனங்களுள் ஒன்றான இண்டிகோ, அஜாக்கிரதையாக இருந்த விவகாரம், பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பயணிகளுக்கு அவர்களின் உடமைகள் விரைவில் வந்து சேரும் என இண்டிகோ விமான நிறுவனம் உறுதியளித்தது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
18-செப்-201906:30:38 IST Report Abuse
skv srinivasankrishnaveni எனக்கும் உண்டு அனுபவம் யு எஸ் லே ந்து சிங்கப்பூர் வரும்போது யுனைடெட் எர்லின்ஸ் விமானம் லே என் லக்கேஜை ஏற்றவில்லை 18மணிநேரம் பயணம் செய்து வந்துட்டுப்பார்த்தால் பெட்டி மிஸ்ஸிங் உடனே என் பேரன் ஆவன செய்து மறுநாள் விமானத்தில் வந்தது வீட்டுக்கும் டெலிவரி செய்தாங்க சிங்கப்பூர் விமான நிலையம் லெந்து அவா உடனே தெரிவிக்க ஏற்றாமல் விட்டது தெரியவந்தது என் மாற்று உடைகள் தான் இருந்தன ப்ராப்லம் இல்லே என்று இருந்தேன்
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
18-செப்-201910:42:32 IST Report Abuse
சுந்தரம் பாதுகாப்பு பரிசோதனைகள் தாமதம் ஆவதால் சில பயணியர்க்கு உடைமைகள் ஏறாமல் விடப்பட்டு இருக்கலாம். ஆனால் செய்தியில் உள்ள சம்பவத்தில் யாருடைய உடமைகளும் எடுத்து செல்லப்படாமல் அனைத்து பெட்டிகளையும் இங்கேயே விட்டு சென்றிருக்கிறார்கள். அந்த அளவுக்கு மீறிய கடமை உணர்ச்சி...
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18-செப்-201903:36:03 IST Report Abuse
J.V. Iyer கேட்கவே கேவலமாக உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Raj - Trichy,இந்தியா
17-செப்-201919:52:05 IST Report Abuse
Raj ஒருசிலரின் கவனக்குறைவால் அந்த இண்டிகோ விமான கம்பெனிக்கு பெயர் ரிப்பேர் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X