பல கட்சி ஜனநாயகம் தோல்வி: அமித்ஷா அடுத்த குண்டு

Updated : செப் 17, 2019 | Added : செப் 17, 2019 | கருத்துகள் (66)
Advertisement

புதுடில்லி: 70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் 'பல கட்சி ஜனநாயக முறை' தோற்றுள்ளதாக மக்கள் நினைக்கின்றனர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த குண்டை துாக்கி போட்டுள்ளார்.





டில்லியில் நடந்த அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் (AIMA) 46வது தேசிய மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:

70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் 'பல கட்சி ஜனநாயக முறை' தோற்றுள்ளதாகவும், இந்த முறையால் நமது இலக்கை அடைய முடியுமா என்றும் மக்கள் மனதில் சந்தேகம் எழுந்துள்ளது. நமது அரசியலமைப்பு என்பது பல நாடுகளின் முறையில் இருந்து ஆராய்ந்த பிறகு பல கட்சி முறை சேர்க்கப்பட்டது.





ஆனாலும் காங்., ஆட்சியில் அரசாங்கம், அரசியல் ரீதியாக முடக்கப்பட்டு எந்த முக்கிய முடிவும் எடுக்கப்படவில்லை. காங்., அமைச்சர்கள் பிரதமர் போல செயல்பட்டனர். ஆனால் பிரதமருக்கு மதிப்பு தரவில்லை. அந்த ஆட்சியில் நாள்தோறும் ஊழல், எல்லையில் பதற்றம் போன்ற செய்திகளே அதிகம் வந்தன.




வாக்கு அரசியலுக்காக மோடி அரசு எந்த முடிவையும் எடுத்ததில்லை. மக்களின் நலனுக்காகவே முடிவெடுத்தது. 30 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்த கட்சிகள் 5 பெரிய முடிவுகளைக் கூட எடுத்ததில்லை. 5 ஆண்டுகள் ஆட்சி செய்த மோடி அரசு, ஜிஎஸ்டி உள்ளிட்ட 50 பெரிய முடிவுகளை இதுவரை எடுத்துள்ளது. 370 பிரிவை ரத்து செய்த நாள் முதல் இதுவரை காஷ்மீரில் ஒரு தோட்டா சத்தம் கூட கேட்கவில்லை. இவ்வாறு அமித்ஷா கூறினார்.

பல கட்சி ஆட்சி முறை குறித்த அமித்ஷாவின் இந்த பேச்சு, ஒரே நாடு, ஒரே கட்சி என்ற நோக்கத்தில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் ஹிந்தி மொழி பற்றி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளதாக கூறிய கருத்தும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
18-செப்-201910:30:20 IST Report Abuse
Malick Raja ..பத்தும் சொல்வான் போகட்டும் விட்டுவிடு
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
18-செப்-201910:27:22 IST Report Abuse
Malick Raja நண்டு கொழுத்தால் வலையில் இருக்காதாம் ...
Rate this:
Share this comment
Cancel
18-செப்-201909:52:05 IST Report Abuse
ஆப்பு மக்கள் நினைக்கிறாங்களாம். எந்த மக்கள்? இவிங்களுக்கு சொம்படிப்பவர்கள் கூட அப்படி நினைக்கலை. இவருடைய சொந்தக் கருத்தை மக்கள் கருத்தா அடிச்சு உடறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X