மரங்களை பாதுகாக்கும் சட்டம் என்ன ஆனது: ஐகோர்ட் கேள்வி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மரங்களை பாதுகாக்கும் சட்டம் என்ன ஆனது: ஐகோர்ட் கேள்வி

Added : செப் 17, 2019
Share

மதுரை: மதுரை மாவட்டம் காளவாசல் பகுதியில் புதிதாக மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெறுகிறது. இதற்காக சாலை ஓரத்தில் இருந்த மரங்கள் அகற்றப்படுகிறது. இதை எதிர்த்து மதுரை செல்லூரை சேர்ந்த குபேந்திரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, பிற மாவட்டங்களை போல் மரங்களை பாதுகாக்கும் சட்டத்தை முறையாக அமல்படுத்த அரசு ஏன் தீவிரம் காட்டவில்லை.

காளவாசல் முதல் குரு தியேட்டர் பகுதி வரையுள்ள 80 மரங்களை வேரோடு எடுத்து வேறு இடத்திற்கு மாற்ற முடியுமா என கேள்வி எழுப்பியது. மேலும், மதுரை கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த வழக்கை செப்., 30ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X