பாக்., வீரர்களுக்கு பிரியாணி ‛கட்'

Updated : செப் 17, 2019 | Added : செப் 17, 2019 | கருத்துகள் (8)
Advertisement

கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் பிரியாணி சாப்பிடக் கூடாது என அணியின் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும், தேர்வு குழு தலைவராகவும் சமீபத்தில் பொறுப்பேற்ற மிஸ்பா உல் ஹக், அணியை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
தற்போது உணவில் கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாக்., வீரர்கள் சோம்பலாக இருப்பதாக அந்த நாட்டு ரசிகர்களே விமர்சனம் செய்த நிகழ்வுகளும் நடந்துள்ளன. அதற்கு சமீபத்திய சான்றாக உலக கோப்பையில் இந்தியாவுடனான போட்டியில் கேப்டன் சர்பராஸ் அகமது, கொட்டாவி விட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இதனை போக்கும் விதமாக மிஸ்பா, அணி வீரர்களை சுறுசுறுப்பாக்க உணவு கட்டுப்பாடு குறித்து அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி அதிகமான எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள், இறைச்சி உணவுகள் மற்றும் இனிப்பு பலகாரங்களை வீரர்கள் சாப்பிடக்கூடாது. குறிப்பாக, அணி வீரர்கள் யாரும் பிரியாணி உட்கொள்ளக்கூடாது.
சுட்ட உணவுப்பண்டங்கள் மற்றும் அதிக பழங்கள் சேர்க்கப்பட்ட பாஸ்தா மட்டுமே போட்டியின்போது வழங்கப்படவேண்டும். இதையே தேசிய போட்டிகளிலும் பின்பற்ற வேண்டும். இந்த உணவு முறையை கட்டாயமாக பின்பற்றவேண்டும் எனவும் அவ்வாறு பின்பற்றாதவர்கள் அணியில் இருந்து நீக்கப்படுவர் எனவும் மிஸ்பா தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
18-செப்-201903:25:06 IST Report Abuse
meenakshisundaram ஐயோ biriyani ஒன்றே அரசியல் நோக்காக உள்ள திமுக கட்சிக்காரர்கள் இதனால் அவிங்களுக்காக போராட்டம் நடத்துவார்களோ?
Rate this:
Share this comment
Cancel
krishna -  ( Posted via: Dinamalar Android App )
17-செப்-201919:42:57 IST Report Abuse
krishna ulaga koppayil indhiavai papal thala Kesha nonnalum jeikka mudiyadhu
Rate this:
Share this comment
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
17-செப்-201918:55:17 IST Report Abuse
Rajagopal அப்போ நம்ம திமுக தலைவரு இத எதித்து எப்பப் போராட்டம் நடத்துவாரு? குவாட்டரு, பிரியாணி இதெல்லாம் மத சார்பற்ற ஒருங்கிணைக்கும் சக்தீங்க இல்ல? பாகிஸ்தானுல பிரியாணி தின்னாம எல்லாரும் செத்துட்டாங்கன்னா? எவ்வளோ பெரிய விஷயம்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X