பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை நிச்சயம் மீட்போம்: ஜெய்சங்கர் உறுதி

Updated : செப் 17, 2019 | Added : செப் 17, 2019 | கருத்துகள் (15)
Advertisement
பாக். ஆக்கிரமிப்பு, காஷ்மீர், மீட்போம்

புதுடில்லி: பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான் அதனை ஒரு நாள் நிச்சயம் மீட்டெடுப்போம் என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
தனது வெளியுறவுத்துறை ரீதியான 100 நாள் சாதனை குறித்து புதுடில்லியில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி,கடந்த 100 நாட்களில் நாட்டின் பாதுகாப்பு இலக்குகளுக்கும், வெளியுறவு கொள்கைக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதையே மத்திய அரசின் மிகப்பெரிய சாதனையாக நான் கருதுகிறேன். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்புறவு வளர்ச்சி கண்டுள்ளது.





அண்டை நாடான பாக். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும். அது வரை நமக்கு அந்நாட்டிற்கெதிரான சவால் நீடித்துக் கொண்டே இருக்கும். பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் ஒரு பகுதி தான் என நமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அதனை ஒரு நாள் நிச்சயமாக மீட்டெடுப்போம். மலேசியாவில் உள்ள ஜாகீர்நாயக்கினை நாடு கடத்தி கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
19-செப்-201903:18:20 IST Report Abuse
Rajagopal காஷ்மீரை ஒருங்கிணைக்க வேண்டுமானால் பாகிஸ்தான் சிறிய நாடுகளாக மாற்றப் பட வேண்டும். இல்லையேல் அது சாத்தியமாகாது. இந்தியாவை எதிர்பாத்து ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு அவர்கள் வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
18-செப்-201910:21:27 IST Report Abuse
Malick Raja திரு . ஜெய்சங்கர் அவர்கள் சொல்வதில் ஒன்று தெளிவாகிறது ..அவர் சொல்ல வைக்கப்படுகிறார் என்பது மட்டும் உண்மை .பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நினைக்கும் முன் நமது இந்தியாவின் காஷ்மீரில் முதலில் அமைதி நிலவ முயலவேண்டும் .. இருப்பதைவிட்டு பறக்க ஆசைப்படுத்தல் அறிவாண்மைக்கு அலகல்லவே
Rate this:
Share this comment
Natarajan Ramasamy - London,யுனைடெட் கிங்டம்
18-செப்-201912:41:16 IST Report Abuse
Natarajan Ramasamyஜெய்சங்கர் மத்திய வெளியுறவு அமைச்சர். வெளியுறவு கொள்கையை பற்றி அவர் இந்தியாவின் கருத்தை சொல்வார். அவர் சொல்ல வைக்க படவில்லை. காஸ்மீர் ராஜா ஹரிசிங் முழு காஷ்மீரை இந்தியாவிடம் தான் ஒப்படைத்தார். பாகிஸ்தானிடம் இல்லை. எனவே இந்தியாவின் காஷ்மீரில் ஒரு பகுதியை ஆக்ரமித்திருப்பது பாகிஸ்தான். அதை திரும்ப பெறவேண்டும் என்று சொல்வதில் தவறு என்ன? 1947 இல் இருந்து இது வரை நாம் நம்மிடம் இருக்கும் காஷ்மீரத்தில் பாகிஸ்தான் கை கூலிகள்,உளவாளிகள், தீவிரவாதிகள், கொலைகாரர்கள் நடமாட விட்டு இருந்தோம். பொய் பிரச்சாரங்களையும், பொய் செய்திகளையும் பரப்புவதை பார்த்துக்கொண்டு இருந்தோம்.இன்று அந்த இல்லை மாறிவருகிறது. 70 வருட தவறான அணுகுமுறை காஸ்மீர் வாச மக்களுக்கும், இந்தியா இறையாண்மைக்கும் நல்லது செய்ய வில்லை. இன்றைய அணுகுமுறை, பொய் பிரச்சாரத்தையும், தீவிர வாதத்தையும் நிறுத்தும் என்று நம்புகிரோம்....
Rate this:
Share this comment
suresh kumar - Salmiyah,குவைத்
18-செப்-201916:56:53 IST Report Abuse
suresh kumar//Malick Raja - Jeddah,சவுதி அரேபியா// நீங்கள் முஸ்லீமாகவே இருந்தாலும், காஷ்மீரில் உங்களால் தொழில் தொடங்கவோ வீடு வாங்கவோ முடியாத நிலை இருந்தது - இப்போது அந்த நிலை மாற்றப்பட்டுள்ளது. பாராட்டுங்கள்...
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
18-செப்-201908:44:17 IST Report Abuse
Anandan பொருளாதார வீழ்ச்சியை மறைக்க என்னவெல்லாம் பேசவேண்டியுள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X